tamilkurinji logo


 

தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்,
தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்

First Published : Monday , 2nd January 2012 09:51:18 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்,

அடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், தினமும் 3 கப் பிளாக் டீ குடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேரி ருக்ஸ்டன் மற்றும் பமீலா மேசன் தலைமையிலான ஆய்வு குழுவினர் நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீக்கு உள்ள பங்கு பற்றிய ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவு குறித்து இங்கிலாந்தின் ஊட்டச்சத்து பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:

பிளாக் டீ குடிக்காதவர்களைவிட குடித்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது ஆய்வில் தெரிகிறது. அதாவது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்க்கவும் பிளாக் டீ உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 3 விதமான பாதிப்புகள் காரணமாக இதயத்துக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு மாரடைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 2ம் நிலை சர்க்கரை நோய் ஏற்படுவதையும் டீ தடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். "தினமும் டீ குடிக்காதவர்களைவிட 3 முதல் 6 கப் வரை டீ குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 30 முதல் 57 சதவீதம் வரை குறையும். டீயில் உள்ள ஒருவித நோய் எதிர்ப்பு பொருளே இதற்குக் காரணம்" என ருக்ஸ்டன், மேசன் தெரிவித்தனர்.

தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம், தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம், தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil
தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும்.இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க

மேலும்...

 மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion
ஒரு கப் தண்ணீரில்  3   பல்  பூண்டு போட்டு, அத்துடன் 1  ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மூக்கடைப்பில்  இருந்து நிவாரணம் கிடைக்கும்.தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து

மேலும்...

 கொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்
வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன.  உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர்.செடிப்பசலை என்ற இனம் உண்டு.  பசலையில்   முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம

மேலும்...

 வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்
உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.நெல்லிக்காயை பொடி செய்து, அதை சிறிதளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in