tamilkurinji logo


 

திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்பு,
செய்திகள் >>> தமிழகம்

திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்பு

First Published : Monday , 26th December 2011 02:42:54 PM
Last Updated : Monday , 26th December 2011 03:03:41 PM


திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்பு,

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை நிறுத்துவதற்கும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை அமல்படுத்தவும் பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவும், புதிய அணை கட்டவும் கேரளா அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும், நீதிமன்ற நடவடிக்கையை சீர்குலையச் செய்யும் செயலாகவே கருதமுடியும். மற்றும் தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 
 
அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அரசால் தவறான தகவல் பரப்பரபட்டதால் ஒரு பகுதியினர் வன்முறையில் இறங்கி, தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வாகனங்களையும், கேரளாவில் வாழும் தமிழர்களையும் தாக்கி வருகின்றனர்.
 
இரு மாநில மக்களிடையே பாரம்பரியமாக பராமரிக்கப்பட்டு வரும் மனமார்ந்த நட்பு மற்றும் உறவு இதனால் பாதிக்கப்படுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பானது நடைமுறையில் செயலற்றதாக உள்ளது.
 
எனவே, சரியான நேரத்தில் நிறுவன ரீதியான புதிய ஏற்பாடு செய்யாவிட்டால், நதிநீதி பாங்கீட்டு பிரச்சினையானது மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிடும். இது பிற்காலத்தில் தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துவிடும். 
 
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதிப்பதால், அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணை அதை தாங்கி வலுவுடன் நிற்கும். எனவே, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த கேரளா அரசு மனிதாபிமானத்துடனும், முழுமனத்துடனும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 
இந்த அணையின் முழு கொள்ளளவான 152 அடி நீரை தேக்கும் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. அணையை பலப்படுத்தும் பணியை தமிழக அரசு செய்து முடித்துவிட்ட பிறகும் கேரளா அரசு பெரியார் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகவே பராமரித்து வந்துள்ளது.
 
இப்போது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் நீர்மட்டத்தை மேலும் குறைத்து 120 அடியாக பராமரிக்க முனைந்துள்ளது. கேரளா அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்குமானால், தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்கள் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு விடும்.
 
கேரளா அரசு அணையின் பாதுகாப்பு பற்றி தவறான பிரசாரத்தை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் இரண்டு மாநிலங்களிலும் விரும்பதகாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. சபரிமலை செல்லும் பக்தர்கள் தாக்கப்படுகின்றனர். பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுகின்றன.
 
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்காக தேனி மாவட்ட ஏழை தொழிலாளி ஒருவர் தீக்குளித்து பலியாகி உள்ளார். இரு மாநில மக்களிடையே நிரந்தரமான பகையுணர்வு தோன்றும் முன்பு, இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு, தாக்குதல் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேலும், 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு செயல்படுத்துவதை உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்பு, திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்பு, திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி
திமுகவில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.திமுகவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி

மேலும்...

 திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in