திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 69.

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ்  கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே போஸின் உயிர் பிரிந்தது. ஏ.கே.போஸின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏ.கே. போஸ் 2016ஆம் ஆண்டு  திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக 2006ஆம் ஆண்டு தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 2011 ம் ஆண்டு தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்.


https://goo.gl/VYwcQ4






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்