திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிய தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர்

திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிய தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர்
கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ஊராட்சி ஜடகொண்டாபுரம் கிராமத்தில் கொண்டம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 55), விவசாயி. இவர் எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (45), மகள் நிர்மலா (24).

நிர்மலா திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த ராஜவேல் மகன் சுப்பிரமணியன் என்ற அன்பழகன் (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிர்மலாவை காதலித்து உள்ளார். சுப்பிரமணியன் சென்னையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

மேலும் நிர்மலாவை திருமணம் செய்து தருவதாக, அவரது பெற்றோர் கூறியதன் பேரில் நிர்மலாவின் படிப்புக்கும் சுப்பிரமணியன் உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. சுப்பிரமணியன் சென்னையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியன் நிர்மலாவின் வீட்டிற்கு சென்று, அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அப்போது சிவராமனும், சாமுண்டீஸ்வரியும் பெண் தரமாட்டேன் என்று கூறி, சுப்பிரமணியனிடம் தகராறு செய்து உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் அன்று இரவு சிவராமன் வீட்டுக்கு சென்றார். அங்கு வெளியே படுத்திருந்த சிவராமனையும், தாழ்வாரத்தில் படுத்திருந்த சாமுண்டீஸ்வரியையும் கத்தியால் வெட்டியுள்ளார்.

மேலும் வீட்டிற்குள் சென்ற அவர், அறையில் கட்டிலில் படுத்து இருந்த நிர்மலாவை துணியால் கழுத்தை நெரித்து உள்ளார்.


இதில் நிர்மலாவும், சாமுண்டீஸ்வரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதைதொடர்ந்து சுப்பிரமணியன் அதே வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அவ்வழியே நிலத்திற்கு சென்ற சிலர் வெளியே சிவராமன் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து அவர்கள் சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவராமனை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சாமுண்டீஸ்வரி, நிர்மலா, சுப்பிரமணியன் ஆகியோர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் நடந்த இடம் தனி வீடு என்பதால் யாருக்கும் உடனடியாக தெரியவில்லை. நேற்று காலையில் இதுபற்றிய தகவல் பரவியதும் ஏராளமான பொதுமக்கள் வீட்டின் முன்பு கூடினர்.

கண்ணமங்கலம் அருகே தாய், மகளை கொலை செய்துவிட்டு லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://goo.gl/kx4nos


06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்