திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்

திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.


அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறித்தும், சென்னை-சேலம் பசுமை வழிசாலைத் திட்டம் குறித்தும் பேசினாராம்.


திருமுருகன்காந்தியின் இந்தப் பேச்சு, மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் விடியோ காட்சியாக வெளியிடப்பட்டிருந்தது.

இதில் திருமுருகன்காந்தி அரசுக்கு எதிராக சில கருத்துகளை கூறியிருந்தாராம். இந்நிலையில் இந்த விடியோ காட்சியைப் பார்த்த சென்னை குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த க.மதன்குமார் என்பவர், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், திருமுருகன்காந்தி அரசுக்கு எதிரான பேசியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கு எதிராக பொதுமக்களிடையே பகை ஊட்டும் வகையில், தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகவும், உள்நோக்கத்தோடு கலகத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஜெனீவாவில் இருந்து திருமுருகன்காந்தி இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, அவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் எடுத்தனர். இதன் ஒரு பகுதியாக திருமுருகன்காந்தி, தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு போலீஸார் 'லுக் அவுட்' நோட்டீஸ் அளித்தனர்.

இந்நிலையில் ஜெனீவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமுருகன்காந்தி வந்தார்.

அப்போது அவர் தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதைப் பார்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகளும், சுங்கத் துறை அதிகாரிகளும் திருமுருகன் காந்தியை கைது செய்து, பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரு போலீஸாரால் திருமுகன் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சைபர் குற்றப்பிரிவு போலீஸார், பெங்களூரு சென்று திருமுருகன் காந்தியை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

வெள்ளியன்று காலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியை இல்லத்தில் அவரை ஆஜர் படுத்த போலீசார் முயன்றனர்.ஆனால் அவரை நீதிமன்றத்தில்தான் ஆஜர் செய்ய வேண்டும் என்று நீதிபதி கண்டிப்பாக கூறி விட்டார்.

இதையடுத்து அவரை சென்னை சைதாப்பேட்டை 11-ஆவது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று தெரிவித்து விட்டார். அதே சமயம் திருமுருகன் காந்தியிடம் 24 மணி நேரம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும், அதற்கு திருமுருகன் காந்தி முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
https://goo.gl/5bnP3K






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது