tamilkurinji logo


 

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு,MK Stalin files nomination for post of DMK president, will contes

MK,Stalin,files,nomination,for,post,of,DMK,president,,will,contes




செய்திகள் >>> தமிழகம்

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு

First Published : Monday , 27th August 2018 02:47:38 PM
Last Updated : Monday , 27th August 2018 02:47:38 PM


தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு,MK Stalin files nomination for post of DMK president, will contes

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர் களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இருவரும் நாளை நடக்கும் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். இதையடுத்து திமுக பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 28-ம் தேதி (நாளை) நடக்கும் என்றும் அதில் கட்சித் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் பதவிக்கு தற்போது செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினும் பொரு ளாளர் பதவிக்கு தற்போது முதன்மைச் செயலாளராக உள்ள துரைமுருகனும் போட்டி யிடுகின்றனர். இதன்படி, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு முன்பாக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டத்தில் உள்ள பொதுச் செய லாளர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

அதையடுத்து மெரினா கடற் கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் வேட்புமனுவை வைத்து ஆசியும் பெற்றனர். பின்னர் கோபாலபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் தனது தாய் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். அவ ருடன் துரைமுருகனும் ஆசிபெற் றார். அங்கிருந்து இருவரும் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றனர்.

அங்கு திரளாக கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காலை 10 மணி அளவில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தலைவர் பதவிக்கு போட்டியிட மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 அவரது மனுவை கட்சியின் 65 மாவட்ட செயலாளர்களும் முன்மொழிந்த னர். மேலும், கட்சித் தலைவர் பதவிக்கு ஸ்டாலினுக்காக அனைத்து மாவட்டச் செயலாளர் களும் தனித்தனியாகவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதையடுத்து திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அங்கு திரண்டிருந்த தொண்டர் கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பி னர். திமுக மகளிரணிச் செய லாளரும் எம்பியுமான கனிமொழி, மு.க.ஸ்டாலினுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், வேறு யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாததால், தலைவராக மு.க.ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியா னது.

50 ஆண்டுகள் தலைவர் பதவியில் நீடித்த கருணாநிதிக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை நடக்கும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவராக மு.க.ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு,MK Stalin files nomination for post of DMK president, will contes தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு,MK Stalin files nomination for post of DMK president, will contes தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு,MK Stalin files nomination for post of DMK president, will contes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in