தீபாவளியை முன்னிட்டு பங்கு சந்தைகளில் முகூர்த்த வணிகம்

தீபாவளியை முன்னிட்டு பங்கு சந்தைகளில் முகூர்த்த வணிகம்
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவம்பர் 13) முகூர்த்த வணிகம் எனும் சிறப்பு வர்த்தகம் நடைபெற உள்ளது. 75 நிமிடங்கள் நடைபெற உள்ள இந்த வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முகூர்த்த வணிகம் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்தில் செல்வச் செழிப்புக்கான கடவுளாக வணங்கப்படும் மகாலட்சுமியை போற்றும் விதத்தில் இவ்வணிகம் நடத்தப்படுகிறது. மேலும் இந்து மத நாட்காட்டியின்படி, சாம்வாட் 2069 புத்தாண்டின் தொடக்க தினத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.

பங்குச் சந்தைகளில் நாளை மாலை 3.45 மணி முதல் 5 மணி வரை முகூர்த்த வணிகம் நடைபெறும். சென்ற ஆண்டு தீபாவளி தினத்தில் மாலை 4.45 முதல் 6 மணி வரை வர்த்தகம் நடைபெற்றது. நாளைய தினம் சிறப்பு வர்த்தகம் 45 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் என முதலில் பங்குச் சந்தைகள் அறிவித்திருந்தன. எனினும் வர்த்தகம் நடைபெறும் நேரம் பின்னர் 75 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. 
https://goo.gl/Vj4csL






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்