துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார்.

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் கூறிவந்தனர். 


இந்த நிலையில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்தன.  இதனால் அ. குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களுடன் ஆலை எதிர்ப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 100வது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.  இதில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியானது வன்முறையாக வெடித்தது. 



இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் 13 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்தனர்.  150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் விடுவிக்கப்பட்டனர்.  தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்ற நிலை நீடித்து வந்தது. 


இதனால் பதற்றத்தினை தணிப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் 144 தடை உத்தரவு இன்று முடிவுக்கு வந்தது.


இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார். 


தூத்துக்குடியில் பேருந்துகள் ஓட தொடங்கியுள்ளன.  இயல்பு நிலை திரும்பியதனால் அங்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்ததனை அடுத்து துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடிக்கு செல்கிறார்.  இன்றிரவு மதுரை செல்லும் அவர் கோவில்பட்டியில் தங்குகிறார்

அதன்பின்னர் அவர் தூத்துக்குடிக்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை சந்திக்க இருக்கிறார்.
https://goo.gl/PXn3zM






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி