tamilkurinji logo


 

துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? கமல்ஹாசன் ,TamilNadu news in Tamil | Chennai news in tamil | Tamilnadu politics ...

TamilNadu,news,in,Tamil,|,Chennai,news,in,tamil,|,Tamilnadu,politics,...




செய்திகள் >>> தமிழகம்

துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? கமல்ஹாசன்

First Published : Tuesday , 22nd May 2018 09:18:24 PM
Last Updated : Tuesday , 22nd May 2018 09:18:24 PM


துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? கமல்ஹாசன் ,TamilNadu news in Tamil | Chennai news in tamil | Tamilnadu politics ...

தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டது யார் என்றும் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது, தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது. துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனம் சட்டத்தை மதிக்காமல் நடக்கிறது. தூத்துக்குடியை மாசுபடுத்தி வருகிறது ஸ்டெர்லைட் ஆலை.

மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பது மட்டும் போதாது அரசும் அமைதி காக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கலை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ரஜினி மக்கள் மன்றம் டிவிட்டர் பக்கத்தில் அட்மின் மூலம் கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த் போலீசார் குறித்து வாய்திறக்கவில்லை. இந்நிலையில் கமல்ஹாசன் காவல்துறைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.



துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? கமல்ஹாசன் ,TamilNadu news in Tamil | Chennai news in tamil | Tamilnadu politics ... துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? கமல்ஹாசன் ,TamilNadu news in Tamil | Chennai news in tamil | Tamilnadu politics ... துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? கமல்ஹாசன் ,TamilNadu news in Tamil | Chennai news in tamil | Tamilnadu politics ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம்

மேலும்...

 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை அடுத்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு

மேலும்...

 சிலை கடத்தல் பிரிவுக்கு தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை : பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி புகார்
சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். இதனால் அருப்தி அடைந்த நீதிபதி, தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை எச்சரித்துள்ளார்.சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in