tamilkurinji logo


 

தும்பையின் மருத்துவ குணம்,thumbai poo

thumbai,poo
தும்பையின் மருத்துவ குணம்

First Published : Thursday , 13th June 2013 11:01:26 PM
Last Updated : Thursday , 13th June 2013 11:01:26 PM


தும்பையின் மருத்துவ குணம்,thumbai pooதும்ப இலையை இடித்த சாறு பாம்புக் கடியுண்டவர்கள் குடிக்க வேண்டும். இதை குடித்தால் குணமாகிவிடும்.

 பாம்பு கடியுண்டவர்களை சுமார் 20 மணிநேரம் வரையில் உறங்க கூடாது. அவர்கள் மண் பானையில் பச்சை அரிசியும், பாசிப் பயறும் கலந்து பொங்கி, அதைத்தான் உணவாகக் கொடுக்க வேண்டும்.

தும்பை இலைச்சாற்றை மூக்கில் சிறிது ஊற்றி வாயால் ஊதினால் சிறிது நேரத்தில் மயக்கம் தெளியும்.  பிறகு தும்பை இலைச்சாற்றை கொடுத்து மேற்கண்ட சிகிச்சை ஆரம்பிக்கலாம்.

* தேள் கடித்தவர்களுக்கு தும்பை இலைச்சாற்றை 4 துளிஎடுத்து, தேனில் கலந்து
 உள்ளுக்குக்  கொடுத்து கொட்டிய இடத்தில் தும்பை இலைச்சாற்றால் தேய்த்தும் விட நோய் குறைந்து விஷம் முறிந்துவிடும்.

சீதளத்தால் வரும் மண்டை இடி, தலைவலி, பீனிசம், மூக்கில் ஒழுக்கு, கபம் ஆகியவை நீங்கத் தும்பை இலைச்சாறு இரண்டு துளி மூக்கில் விட்டு உறிஞ்சுவரக் குணமாகும்.

பெண்களுக்கு வாய்வு சம்பந்தத்தால் மாதவிடாய் தடைப்பட்டு தாமதமாகும் போது, தும்பை இலை, உத்தாமணி இலை சமமாக எடுத்து அரைத்து காலை, மாலை சுண்டைக்காய் அளவு பசும்பாலுடன் சாப்பிடக் கொடுக்கவும். உதிரச் சிக்கல் உடைந்து மாதவிடாய் சரியாகும

 தும்பை பூவை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தேய்த்து குளித்தால் ஜலதோஷம், தலைப்பாரம், சிரரோகம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

 தும்பைப் பூவின் சாறு, உத்தாமணிச் சாறு , மிளகுத்தூள் மூன்றையும் கலந்து சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி ஆகிய நோய் தீரும்

 தும்பைப் பூவை அரைத்து தண்ணீ ர் ஊற்றி சுண்டக்காய்ச்சி 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் கண் நோய்கள், தரகம், சீதளக் காய்ச்சல் குணமாகும்.

 தும்பைப் பூ கபத்தை அகற்றும். உடலுக்கு உஷ்ணத்தையும், கண்களுக்கு ஒளியையும் தரும். சிரரோகம், நேத்திர ரோகங்களில் சிறப்பாக வேலை செய்யும். பெண்களின் உதிரச் சிக்கலைச் சரி செய்து சீராக்கும்.


தும்பையின் மருத்துவ குணம்,thumbai poo தும்பையின் மருத்துவ குணம்,thumbai poo தும்பையின் மருத்துவ குணம்,thumbai poo
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி பழம் மருத்துவ குறிப்பு
தேவையான பொருட்கள்:  பப்பாளி பழத்தை   மிக்சியில்   போட்டு   நன்கு  அரைத்து    2 ஸ்பூன்  அளவுக்கு எடுக்கவும். இதனுடன்  அரை   ஸ்பூன்   சீரகப்பொடி சேர்க்கவும். இரண்டும்   சேர்த்து   ஒரு டம்ளர்    நீர்  விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு    வந்தால் 

மேலும்...

 இலைகளின் மருத்துவ குணம்
மூங்கில் இலை சாம்பலில் பல்தேய்த்தால் பற்களில் உள்ள கறை நீங்கும்.துளசி கசாயம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.தினமும் வாழை இலையில் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம். தோல் பளபளக்கும். பித்தத்தை சமபடுத்தும்.

மேலும்...

 கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்
இது சளியைக் கரைப்பதோடல்லாமல் நீரைப் பெருக்கும் ஆற்றலுமுள்ளது. வீக்கத்தைக் கரைக்கும் சக்தியும் கண்டங்கத்திரிக்கு உண்டு. மேலும் கப சம்பந்தப்பட்ட காய்ச்சலைத் தணிக்கும்.* கண்டங்கத்திரிச்  செடி முள் நிரம்பியது. பூ நீலநிறமுடையது. காய் சுண்டைக்காயைப் போன்று பச்சையாகவும், பழம் மஞ்சளாகவும், சில வெண்மையாகவும்

மேலும்...

 கீழா நெல்லி மருத்துவ குணம்
 கீழாநெல்லி இலை, கரிசாலங்கண்ணி இலை, தும்பை இலை மூன்றும் சம அளவு எடுத்து அம்மியில் அரைத்துக் காய்ச்சிய பசும் பாலில் பெரியவர்களுக்குப், சிறியவர்களுக்கு, குழந்தைகளுக்குச்  காலையில் மட்டும் ஒரு வாரம் முதல் 10 நாள் தரவும். * உணவு காரம், புளி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in