tamilkurinji logo


 

தெலுங்கானா போராட்ட குழுவில் பிளவு?,




செய்திகள் >>> இந்தியா

தெலுங்கானா போராட்ட குழுவில் பிளவு?

First Published : Wednesday , 17th February 2010 06:51:16 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM



தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வரும் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா தனி மாநிலத்திற்காக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 35 எம்எல்ஏ.,க்கள் ராஜிநாமா செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களும் எம்எல்ஏ.,க்களும் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டனர்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவுக்கு ஆதரவாக கூட்டு நடவடிக்கை குழு செயல்பட்டு வருவதாக தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இதையடுத்து, தனி மாநிலப் போராட்டத்தில் தமது நிலையை தாமே முடிவு செய்துகொள்வது என்று அவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ''தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ.,க்கள் ராஜிநாமா கடிதங்களை கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர் கோதண்டராமிடம் சமர்ப்பித்துள்ளனர். இதுகுறித்து முடிவு எடுக்கும் முன்னர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடமும் கோதண்டராம் கருத்து கேட்க வேண்டும். அதைவிடுத்து, அவர் 'தபால்காரர்' போல் செயல்படக் கூடாது.'' என்று காங்கிரஸ் எம்.பி., பொன்னம் பிரபாகர் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்து எம்.பி.,க்களும் எம்எல்ஏ.,க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூட்டு நடவடிக்கை குழு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இது புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

தெலுங்கானா போராட்ட குழுவில் பிளவு?, தெலுங்கானா போராட்ட குழுவில் பிளவு?, தெலுங்கானா போராட்ட குழுவில் பிளவு?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in