tamilkurinji logo


 

தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு : ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு,




செய்திகள் >>> தமிழகம்

தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு : ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு

First Published : Wednesday , 28th December 2011 08:38:21 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு : ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு,

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் குழு அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகார குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்கும்வரை குழு அமைக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் நில நடுக்கம், வெள்ள அபாயம் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ள அவசரகால நடவடிக்கைகள் திட்டத்தை உருவாக்க நிபுணர் குழுவை அமைப்பதற்கான அறிவிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த 12-ம் தேதி வெளியிட்டது.

இந்தக் குழு அமைக்கும் அறிவிப்புக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தப் பிரச்னை குறித்தும், குழு அமைக்கப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 20-ம் தேதி அவர் கடிதம் எழுதினார்.

"உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள அதிகார குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளது. சில சோதனைகளை நடத்தி வருகிறது. இந்தக் குழுவின் அறிக்கை வரும் பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்திலும், அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் குழு முன்பும் நிலுவையில் உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அவசர கால நடவடிக்கை திட்டத்தை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழு தேவையற்றது. எனவே, அந்த உத்தரவை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்"' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

நிபுணர் குழு அமைப்பதை நிறுத்தி வைக்கக் கோரி, பிரதமரிடம் அவர் நேரிலும் வலியுறுத்தினார். சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதுதொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் அளித்தார். இந்தச் சூழ்நிலையில், நிபுணர் குழு அமைக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடத்தில் நிலநடுக்கம், அல்லது வெள்ள ஆபத்து, அல்லது இரண்டும் சேர்ந்து ஏற்படக்கூடிய வாய்ப்பு மாதிரிகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால், தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான அவசரகால நடவடிக்கைகள் திட்டம் ஒன்றை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடந்த 20-ந் தேதி கடிதம் ஒன்றை எழுதினார்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள அதிகார குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளது என்றும், மேலும் சில சோதனைகளை நடத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டு, இக்குழுவின் அறிக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் உச்சநீதிமன்றத்திலும், அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர் அதிகாரக்குழு முன்பும் நிலுவையில் உள்ள நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அவசர கால நடவடிக்கை திட்டம் உருவாக்க ஏற்படுத்தப்பட்ட நிபுணர் குழு தேவையற்றது என்றும் எடுத்துக்கூறி, அந்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என்று பிரதமருக்கு அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

பிரதமரை கடந்த 25-ந் தேதி சென்னையில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுபற்றி எடுத்துக்கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகார குழு உச்சநீதிமன்றத்திற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில், அவசரகால நடவடிக்கை திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்படுவதை நிறுத்தி வைத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு : ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு, தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு : ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு, தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு : ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம்

மேலும்...

 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 அண்ணா, கலைஞர் பாதையில் ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்த வேண்டும்: விஜயகாந்த்
அண்ணா மற்றும் கருணாநிதி பாதையில் ஸ்டாலினும் பயணித்து திமுகவை சீரும் சிறப்புமாக வழிநடத்த வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக

மேலும்...

 தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர் களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இருவரும் நாளை நடக்கும் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.முன்னாள் முதல்வரும் திமுக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in