தோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையின் பயன்கள்
First Published : Tuesday , 29th November 2016 11:44:32 AM Last Updated : Tuesday , 29th November 2016 11:44:32 AM
குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.
குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் / கொழுப்பைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து குப்பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும்
அல்லது குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வரலாம். நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை, ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம், மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றி வர வேண்டும்.
மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும்.
பதினெட்டு வகை எனவும், கூறுவர். அவை இவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும்.
மோரில் சாப்பிடவும். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.
குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி சிரங்கு படை குணமடையும்.
எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.
குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.
மாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும்.இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க
மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion ஒரு கப் தண்ணீரில் 3 பல் பூண்டு போட்டு, அத்துடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து
பெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர,
கர்ப்பிணி பெண்களின் வயிற்றுவலி குறைய பாட்டி வைத்தியம் | karpa kala valigal
இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி பின்பு வதக்கி 200 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பவதியின் வயிற்றுவலி குறையும்.