நடப்பாண்டு உருக்கு உற்ப்பத்தி 6.4 சதவிகிதம் உயர்வு

நடப்பாண்டு உருக்கு உற்ப்பத்தி 6.4 சதவிகிதம் உயர்வு
நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில் உருக்கு உற்பத்தி, 6.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 68.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 64.40 லட்சம் டன்னாக இருந்தது என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்ற ஜனவரியில், உருக்கு உற்பத்தி, 3.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 66 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது. எனி னும், இந்த உற்பத்தி, பிப்ரவரி மாதத்தில்,0.5 சதவீதம் சரிவடைந்து, 62 லட்சம் டன்னாக குறைந்து போனது.

உலக உருக்கு உற்பத்தி, சென்ற மார்ச் மாதத்தில், 1 சதவீத அளவிற்கு மட்டுமே உயர்ந்து, 13.35 கோடி டன்னிலிருந்து, 13.49 கோடி டன்னாக சற்று அதிகரித்துள்ளது.

இதில் சீனாவின் உருக்கு உற்பத்தி, 6.63 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாத உருக்கு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது, 6.6 சதவீத வளர்ச்சியாகும்.நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், உலக உருக்கு உற்பத்தி, 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 38 கோடி டன்னிலிருந்து, 38.87 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, உலக உருக்கு கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது
https://goo.gl/HQ5ZgY






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்