tamilkurinji logo


 

நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை

First Published : Thursday , 30th August 2018 07:36:22 PM
Last Updated : Thursday , 30th August 2018 07:36:22 PM


நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

துணை நடிகையின் கள்ளக்காதலனை கொடைக்கானலில் வைத்து, கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தை தலைமறைவானார். இதில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் தேதி போலீசார் மீட்டனர். காரில் ரத்தமும், தூவப்பட்டிருந்த மிளகாய் பொடியும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.  விசாரணையில், இந்த கார் கொடைக்கானலை சேர்ந்த பிரபாகரனுக்கு (28) சொந்தமானது என தெரிந்தது. இவரே கார் டிரைவராகவும் இருந்துள்ளார்.

ஆகஸ்ட் 24ம் தேதி இரவு வாடகைக்கு செல்வதாக கூறி சென்ற பிரபாகரன் வீடு  திரும்பவில்லை. சிட்டி டவர் என்ற வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் பிரபாகரனின் உடல், கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கடைசியாக பிரபாகரன் செல்போனுக்கு பேசியது அவரது நண்பரான மற்றொரு கார் டிரைவர் செந்தில்குமார்(37) என்பது தெரிந்தது.

இதனால் அவரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில்,  தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்துக்காக பிரபாகரனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். செந்தில்குமாரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலையில் தொடர்புடைய மணிகண்டன் (28), முகமது  சல்மான் (20), அவரது தம்பி ஆகியோரை கைது செய்தனர்.

 கைதான செந்தில்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:சென்னை, திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். அவரது மனைவி, துணை நடிகை விஷ்ணுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுபிரியா, நடிகர் சூர்யா நடித்த ‘மாயாவி’ என்ற படத்தில்  ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். விஷ்ணுபிரியாவின் தந்தை தொழிலதிபர் சூரியநாராயணன் ஐதராபாத்தில் உள்ளார்.

இவருக்கு கொடைக்கானலில் வீடு, நிலம் இருக்கிறது. மனநிலை பாதிப்பில் இருக்கும் ரமேஷ்கிருஷ்ணனை கொடைக்கானலில் உள்ள ஒரு  விடுதியில் தங்கவைத்து, சிகிச்சை அளிக்கின்றனர். அவரை பார்க்க விஷ்ணுபிரியா அடிக்கடி கொடைக்கானல் வந்து சென்றுள்ளார்.சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து செல்லும் விஷ்ணுபிரியாவை கொடைக்கானலுக்கு அழைத்து வரவும், மீண்டும் விமானநிலையம் அழைத்துச் செல்லவும் பிரபாகரன் தனது காரை எடுத்துச் செல்வார்.

இதில்  இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனுக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பழக்கம் அதிகரித்து, ₹15 லட்சம் வரை பிரபாகரனுக்கு விஷ்ணுபிரியா கொடுத்திருப்பதாக தெரிகிறது.

 ஒரு மாதத்துக்கு முன்பு விஷ்ணுபிரியா கொடைக்கானல் வந்தபோது, ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தவர், அருகில் பிரபாகரனை வைத்துக் கொண்டு, தனது தந்தை சூரியநாராயணனை செல்போனில் தொடர்பு  கொண்டு பேசியுள்ளார். அப்போது, பிரபாகரனை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சூரியநாராயணன், பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.


இதைத்தொடர்ந்து என்னிடம் அவர் பேசினார். கொடைக்கானலில் சூரியநாராயணன் வீடு கட்டிக் கொடுத்த கான்ட்ராக்டருக்கு நான் டிரைவராக  இருந்தேன். அப்போது என்னை அவருக்கு தெரியும். எனவே பிரபாகரனை கொலை செய்ய ₹3 லட்சம், 13 சென்ட் நிலம் தருவதாக பேரம் பேசினார்.


இதன்பேரில் நான், மணிகண்டன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிரபாகரனை  கொலை செய்ய திட்டமிட்டோம். மணிகண்டன் வங்கி கணக்கில் சூரியநாராயணன் முன்தொகை ₹50 ஆயிரம் செலுத்தினார். மீதியை பிறகு தருவதாக கூறினார்.

ஆகஸ்ட் 24ம் தேதி இரவில் நான் போனில் தெரிவித்தபடி, பிரபாகரன் குறிஞ்சி ஆண்டவர் கோயிலருகே வந்தார். அவரை அழைத்து சென்று மதுகுடிக்க வைத்து, குடிபோதையில் இருந்த அவரை காருக்குள் வைத்து கண்ணில்  மிளகாய் பொடியை தூவி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றோம். உடலை வனப்பகுதியிலுள்ள பள்ளத்தில் வீசினோம். காரை உகார்தே நகரில் நிறுத்திவிட்டுச் சென்றோம்.இவ்வாறு அவர் தெரிவித்தாக போலீசார் கூறினர்.

தலைமறைவான சூரியநாராயணனை தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்துள்ளனர். கள்ளக்காதலனை, நடிகையின் தந்தையே கூலிப்படை ஏவி கழுத்தை அறுத்து  கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in