நடுத்தர மக்களின் ஷாப்பிங் சரிந்தது

நடுத்தர மக்களின் ஷாப்பிங் சரிந்தது
ஏழை, நடுத்தர மக்களில் 70 சதவீதம் பேர், இந்த ஆண்டு பண் டிகை காலங்களில் பொரு ட்கள் வாங்குவதை குறை த்து விட்டனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பண்டிகை காலங்களில் மக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது பற்றி வர்த்தக அமைப்பான அசோசேம் ஒரு ஆய்வு நடத்தியது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஐதராபாத், புனே, சண்டிகர், டேராடூன் ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை வருமாறு:

இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் பொரு ட்கள் வாங்குவது, மக்களிடம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணம், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுதான். ஏழை, நடுத்தர மக்களில் 70 சதவீதம் பேர் பண்டிகை கால செலவுகளை குறைத்து விட்டனர். பெரிய நகரங்களில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதில், 78 சதவீதம் பேர் குறிப்பிடத்தக்க அளவுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைத் தால் மட்டுமே பொருட்கள் வாங்குவதாக தெரிவித்தனர்.  

பெரும்பாலானோர் தங்கத்தில் 3 சதவீதமும், துணி மற்றும் இனிப்பு வகைகளில் 27 சதவீதமும், வாகனங்களில் 9 சதவீதமும், வீட்டை அலங்கரிப்பதில் 12 சதவீதமும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் 8 சதவீதமும் செலவழிப்பதாக கூறினர். அதே சமயம், கருத்து தெரிவித்தவர்களில் பணக்காரர்கள், விலையை பொருட்படுத்தாமல் வாங்குவதாக கூறினர்.
https://goo.gl/cJ4N7e


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்