tamilkurinji logo


 

நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்,Business news வணிக செய்திகள்

Business,news,வணிக,செய்திகள்




நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்

First Published : Wednesday , 6th March 2013 06:39:15 PM
Last Updated : Wednesday , 6th March 2013 06:39:15 PM


நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்,Business news வணிக செய்திகள்

ஒப்பந்தப்படி வாடிக்கையாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு ஐரோப்பிய யூனியன் 561 மில்லியன் யூரோ(ரூ.4,020 கோடி) அபராதம் விதித்துள்ளது.

உலகின் முன்னணி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம். பில்கேட்ஸ் தலைமையிலான இந்நிறுவனம், விண்டோஸ் பெயரில் புதுப்புது சாப்ட்வேர்களை வெளியிட்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2009ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன்படி, இன்டர்நெட் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக, விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில், பல்வேறு பிரவுசர் வாய்ப்புகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்பது விதிகளில் ஒன்று. ஆனால், 2011 மே முதல் ஜூலை 2012ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட விண்டோஸ்-7ல், மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது.

அதாவது, இந்த காலத்தில் விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை வாங்கிய ஒன்றரை கோடி பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதன் மூலம் பல கோடிகளை அந்நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பான புகாரை ஐரோப்பிய யூனியன் கமிஷன் விசாரணை செய்தது. ஒப்பந்தத்தை மீறி நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,020 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பு இரு முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் அபராதம் விதித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்துடன் சேர்த்து, அந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.15,840 கோடியாக உயர்ந்துள்ளது.

நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்,Business news வணிக செய்திகள்
நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்,Business news வணிக செய்திகள்
நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்,Business news வணிக செய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in