நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்  மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்
நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்  மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம்.


 தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால்  வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பெரும்பாலான மக்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல்பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதேபோன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சியசத்தும், கொழுப்புசத்தும் இருக்கின்றது. மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியா தான். இப்போதும் அதிகமாக இங்கு தான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.


உத்திரப்பிரதேசத்தில் சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பங்கனப் பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல்கோவா, கிளி மூக்கு என்று பல்வேறு வகையான மாம்பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாரும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒரு வகை சட்னி, பழஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

தினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி பல் குறித்த நோய்கள், மேனியில் சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. ரத்த விருத்தி உண்டாகும். கனியாத பழங்களை சாப்பிட்டால் கண் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழுத்த பழமே சாப்பிட வேண்டும். உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
மனிதர்களுக்கு தினசரி 5 ஆயிரம் யூனிட்டு வைட்டமின் தேவை. மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. இருதயம் வலிமை பெறும். பசி தூண்டுதல், உடல் தோல் நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும்.


கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது ரத்தஅணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது. இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.

100 கிராம் மாம்பழச்சதையில்- நீர்ச்சத்து 81 கிராம். நார்ச்சத்து 0.70 கிராம். மாவுச்சத்து 16 கிராம்.

கொழுப்பு 0.40 கிராம், புரதம் 0.60 கிராம், உலோக உப்புகள் 0.40 கிராம், கரோட்டின் 27.43 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 16 மிலி கிராம், தயாமின் 0.008 மிகி, ரிபோபிளேவின் 0.09 மிகி, நியாசின் 0.09மிகி, கால்சியம் 14 மிகி, பாஸ்பரஸ் 16 மிகி, இரும்பு 1.30 மிகி என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

:1) மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

2) தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும் கோடை மயக்கத்தை தீர்க்கும்.

3) மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

4) பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

5) மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும்.

6) மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

7) கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

8) மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம், மற்றும் தோல் நோய் தொல்லைகளை நீக்கும்.
https://goo.gl/W8ktpq


06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses