tamilkurinji logo


 

நாளை கிறிஸ்துமஸ் : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!,




செய்திகள் >>> தமிழகம்

நாளை கிறிஸ்துமஸ் : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!

First Published : Saturday , 24th December 2011 12:54:42 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


நாளை கிறிஸ்துமஸ் : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!,

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதல் அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிட உவகை பெருக்குடன் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் எனதருமை கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பின் திருவுருவம், கருணையின் வடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும். இயேசுபிரான் அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்து காட்டிய திருமகன். இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த பெருமகன். அவர் அன்பை போதித்தார்.

அன்பு வார்த்தையாலும் அன்பு வாழ்க்கையாலும் உலகை ஆட்கொண்ட இரக்கத்தின் வடிவமாம் இயேசுபிரான் பிறந்த நன்னாளாம் இந்த இனிய திருநாளில் உலகமெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும், சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாளை கிறிஸ்துமஸ் : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!, நாளை கிறிஸ்துமஸ் : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!, நாளை கிறிஸ்துமஸ் : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம்

மேலும்...

 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 அண்ணா, கலைஞர் பாதையில் ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்த வேண்டும்: விஜயகாந்த்
அண்ணா மற்றும் கருணாநிதி பாதையில் ஸ்டாலினும் பயணித்து திமுகவை சீரும் சிறப்புமாக வழிநடத்த வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக

மேலும்...

 தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு பொதுக்குழுவில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர் களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இருவரும் நாளை நடக்கும் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.முன்னாள் முதல்வரும் திமுக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in