நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்

நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்
நிபா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழகத்தில் இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வவ்வால்களால் பரவும் நிபா வைரஸ் மனிதர்களையும், விலங்குகுளையும் தாக்கி வருகிறது. பல நாடுளில் இந்த வைரஸ் பெருத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தாக்குதலால் அங்கு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நோய் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “மலைப்பாங்கான பன்றிப் பண்ணைகளில் இருந்து தான் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவ வாய்ப்பில்லை. எந்தவொரு நோய்த் தாக்கத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடிய உயிரினம் வவ்வால். கேரளாவில் நோய் பாதித்த வவ்வால்கள் அதிக தூரம் பறந்து வர வாய்ப்பில்லை. இருப்பினும், கேரள எல்லையில் இருக்கக்கூடிய நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் நிலைமையை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அதனால், ஏதேனும் குறிப்பிட்ட பகுதியில் கூடுதலாக காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். ஆனால், இதுவரை அப்படி எதுவும் இல்லை.

தமிழகத்தில் தேவையற்ற பீதி வேண்டாம். சுகாதாரத் துறை கால்நடைத் துறையுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டால் அது எம்மாதிரியான காய்ச்சல் என்பதை அரசு மருத்துவமனைக்கு சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். கேரளாவில் உள்ள சுகாதாரத் துறையுடன் தொடர்பில் தான் உள்ளோம்” என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
https://goo.gl/ckNd2C


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்