நீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

நீட் தேர்வு தோல்வி   10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
நீட் தேர்வில் சிறப்பாகச் செயல்படமுடியாததை எண்ணி மனமுடைந்து ஹைதராபாத்தில் 18வயது மாணவி ஒருவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் பிரதிபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்தார்,டெல்லியில் ஒரு மாணவர் மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இப்போது 3-வதாக மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம், கச்சேகுடா அருகே உள்ள நாராயணகுடாவில் சைதன்யா ஜூனியர் கல்லூரியில் பியோபிக் 2-ம் ஆண்டு படிப்பு படித்து வந்தவர் ஜஸ்லீன் கவுர்(வயது 18). இவரின் தந்தை ரண்வீர் சிங்.


இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். ஜஸ்லீன் கவுர் பரகத்புரா நகரில் உள்ள அவரின் சித்தப்பாவின் வீட்டில் இருந்து தங்கி படித்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை என்பதால், இந்த முறை தீவிரமாக கவுர் படித்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் எதிர்பார்த்த அளவுக்கு கவுருக்கு மதிப்பெண் கிடைக்கவில்லை.


இதையடுத்து, மனமுடைந்து காணப்பட்ட ஜஸ்லீன் கவுர், நேற்று காலை அபிட்ஸ் பகுதியில் உள்ள ஷாப்பிங் காம்ப்பிளஸ் பகுதியின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜஸ்லீன் கவுர் தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பின் போலீஸார் வந்து ஜஸ்லீன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரின் பெற்றோருக்கும் போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

ஜஸ்லின் கவுர் தற்கொலை செய்து கொண்ட வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் கோபி என்பவர் கூறுகையில், ‘‘காலையில் மணி 10.20 இருக்கும், மிக்பெரிய சத்தத்தைக் கேட்டேன்.


சுவற்றில் பொருத்தி இருக்கும் ஏசி மெஷின் விழுந்துவிட்டதா அதை எல்லோரும் பார்க்கிறார்களா எனப்பார்த்து வெளியே ஓடினேன் அங்கு கவுர் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.

அந்த பெண் தற்கொலைசெய்யும் முடிவோடு 10-வது மாடியில் நிற்கும் போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சத்தம் போட்டு கீழே இறங்கக் கூறியுள்ளனர், சிலர் அந்த பெண்ணைக் காப்பாற்ற மேலே சென்றுள்ளனர். ஆனால், அந்தப் பெண் கண்இமைக்கும் நேரத்தில் விழுந்துவிட்டார்’’ எனத் தெரிவித்தார்.

போலீஸாரிடம் ஜஸ்லீன் கவுரின் உறவினர்கள் கூறுகையில், ‘‘12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைத்தான் ஜஸ்லின் எடுத்தார். ஆனால்,நீட் தேர்வில் தேர்வாக முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்து வந்தது.


ஆனால், இந்த முறை நீட் தேர்வில் ஜஸ்லீன் என்ன மதிப்பெண் எடுத்தார் என்பதை எங்களிடம் அவர் கூறவில்லை. அவளின் மதிப்பெண் குறித்து அவளின் தோழிகளிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டோம்’’ எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜஸ்லின் தற்கொலை செய்து கொள்வதற்காக மாடியில் ஏறுவது, 10-வது மாடிக்குச் செல்வது போன்ற காட்சிகள் அனைத்தும் வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.


மேலும், 10-வது மாடியில் இருந்து கவுர் கீழே விழுந்த காட்சியையும் சிலர் செல்போனில் படம் பிடித்து அதை பரப்பிவிட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் துணை ஆய்வாளர் லட்சுமணய்யா கூறுகையில், ‘‘ஜஸ்லின் கவுர் காலையில் உடற்பயிற்சிக்கூடத்துக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து 8.45 மணிக்கு புறப்பட்டுள்ளார்.


ஆனால், இந்த வணிக வளாகத்துக்கு இருசக்கர வாகனத்தில் கவுர் வந்துள்ளார். சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு மாடியில் ஏறி தற்கொலை செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்‘‘ எனத் தெரிவித்தார்.
https://goo.gl/vu9PJM


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்