tamilkurinji logo


 

நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்! -உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> இந்தியா

நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்! -உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி

First Published : Sunday , 11th March 2018 07:04:18 PM
Last Updated : Sunday , 11th March 2018 07:04:18 PM


நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்! -உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பள்ளிப் பேருந்தின் நடத்துனரின் கால் விபத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை எடுத்து அவருக்கே தலையனையாக்கிய கொடுமை மருத்துவமனையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

உத்தரப்பிரதேசம், ஹான்சி மாவட்டத்தில், மவுரியான்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த பள்ளிப்பேருந்து, மாணவர்களை வீட்டில் இறக்கிவிட்டு பாமுரி கிராமத்துக்கு நேற்று வந்து கொண்டு இருந்தது.

அப்போது, சாலையின் குறுக்கே திடீரென ஆடுகள் சென்றதால், அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ் திருப்பி இருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்டிரைவரும், மாணவர்கள் சிலரும், காயத்துடன் உயிர்தப்பினார். ஆனால், நடத்துனர் ஞான்ஷியாம்(வயது28) பேருந்தின் அடியில் சிக்கியதால், அவரின் கால் துண்டிக்கப்பட்டது..

இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஹான்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் , மாணவர்கள்அனுமதிக்கப்பட்டனர்.

இதில் நடத்துனர் ஞான்ஷியாமை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், அவரை படுக்க வைத்த மருத்துவமனையின் செவிலியர்கள், தலையணை இல்லாததால், ஞான்ஷியாமின் துண்டிக்கப்பட்ட காலை அவருக்கே தலையணையாக வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தைப் பார்த்த ஞான்ஷியாமின் உறவினர்கள் மருத்துவர்களிடமும், ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இதை ஊடகத்தினர் வீடியோ எடுத்து ஒளிபரப்பியதால் வைரலாகி பெரும் பரபரப்புக்கு உள்ளானது.

இந்நிலையில்,. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரப்பிரதேச மருத்துவக் கல்வி அமைச்சர் அசுடோஷ் டான்டன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசரப்பிரிவு மருத்துவர் மகேந்திர பால் சிங், அலோக் அகர்வால், செவிலியர்கள் தீபா நராங், ஷாசி ஆகியோர் சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது துறைரீதியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்லூரிகளின் இயக்குநர் கே.கே. குப்தா தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சாதனா கவுசிக் கூறுகையில், ‘விபத்தில் படுகாயமடைந்து வந்த ஞான்ஷியாமின் இடதுகால் முழுமையாக சேதமடைந்துவிட்டது.

 அந்த காலின் ஜவ்வு,நரம்புகள் முழுமையாக நசுங்கிவிட்டதால், அவரின் கால் மீண்டும் பொருத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஞான்ஷியாம் கால் எடுக்கப்பட்டது.

ஆனால், துரதிருஷ்டவசமாக செவிலியர்கள் சிலர் அந்த காலை அவரின் தலைக்கு கீழ்தலையணையாக வைத்துவிட்டனர் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆத்திரமடைந்த ஞான்ஷியாமின் உறவினர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரை டிஸ்சார்ஜ் செய்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஞான்ஷியாமின் மைத்துனர் கூறுகையில், ‘என் மைத்துனர் ஞான்ஷியாமை கவனிக்க மருத்துவமனையில் யாரும் இல்லை. சிகிக்சையும் முறையாக அளிக்கப்படவில்லை. ஆதலால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க இருக்கிறோம்’எனத் தெரிவித்தார்.

விபத்தில் கால் இழந்து சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கால் அவருக்கே தலையணையாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்! -உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்! -உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்! -உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்
 நடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார்” என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, “புகழ்பெற்ற நடிகை

மேலும்...

 பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்
உத்தரப் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதால் அவரை பள்ளியில் இருந்து முதல்வர் வெளியேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் பிஜானோரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in