பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் விவகாரம் : மோசடி தொகை 1300 கோடி அதிகரிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் விவகாரம் : மோசடி தொகை 1300 கோடி அதிகரிப்பு
11400 கோடி ரூபாய் வங்கி ஊழல் வழக்கில் மேலும் 1300 கோடிக்கும் மேல் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் தெரிவித்தது.


மேலும், நிரவ் மோடியுடன் இணைந்து சிலர் வங்கி கோடியில் ஈடுபட்டதாகவும், மோசடி தொகைகளை வெளிநாடுகளில் பதுக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

 இதற்கிடையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமைறைவாகிருக்கும் நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர விசாரணை முகமைகள் பல்வேறு நடவடிக்கைகளை துவங்கியுள்ளன.

இந்நிலையில் பல்வேறு விசாரணைகளுக்கிடையே நடப்பு மோசடி மதிப்பீட்டு தொகை 11,400 கோடி ரூபாயை காட்டிலும், 1300 கோடிக்கு மேல் கூடுதலாக அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இதன் மதிப்பு அமெரிக்க டாலரின் படி 204.25 மில்லியன் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.

11400 கோடி ரூபாய் ஊழல் என்பது இந்திய வங்கித் துறையில் நடந்துள்ள மிகப்பெரிய மோசடி தொகையாகும்.

இந்நிலையில், மேலும் கூடுதலாக 1300 கோடிக்கும் மேல் மோசடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது என பொதுத்துறை வங்கியின் சமீபத்திய அறிவிப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
https://goo.gl/13D9NX






27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்