பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரிசர்வ் வங்கி, வட்டியை குறைக்க வாய்ப்பில்லை

பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரிசர்வ் வங்கி, வட்டியை குறைக்க வாய்ப்பில்லை
பணவீக்கம் அதிகமாக உள்ளதால், பாரத ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பில்லை என பெரும்பாலான பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜுன் மாதத்தில் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பொது பணவீக்கம் 7.25 சதவீதமாக உள்ளது. இது, பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் அதிகமாகும். மேலும், சில்லரை விலை பணவீக்கமும் 10.02 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை மிகவும் குறைந்துள்ளது. அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் உணவு தானியங்கள் விலை உயரும். எனவே, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பது பாரத ரிசர்வ் வங்கிக்கு ஒரு சவாலாக இருக்கும்.

பாரத ரிசர்வ் வங்கி கடந்த 2010 மார்ச் மாதத்திலிருந்து 2011 அக்டோபர் வரையிலான 20 மாத காலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை 13 முறை உயர்த்தியது. இதனையடுத்து, கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.5 சதவீதமாக குறைந்தது.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரல் 17-ந் தேதி அன்று முக்கிய கடன்களுக்கான வட்டியை 0.50 சதவீதம் குறைத்தது. ஜுன் 16-ந் தேதி வெளியிட்ட பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. எனவே, இன்று வெளியிடும் ஆய்வு அறிக்கையில் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பது தொழில்துறையினரின் கோரிக்கையாக உள்ளது.

வங்கிகள் திரட்டும் டெபாசிட்டுகளில் குறிப்பிட்ட சதவீதத்தை பாரத ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக இருப்பு வைக்க வேண்டும். இதற்கு ரொக்க இருப்பு விகிதம் என்று பெயர். இது, தற்போது 4.75 சதவீதமாக உள்ளது. இதனை 0.50 சதவீதம் குறைக்கும் என வங்கிகள் எதிர்பார்க்கின்றன. அதேசமயம், முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பில்லை என்று பல வங்கிகள் தெரிவித்துள்ளன.
https://goo.gl/vauP6h


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்