பணிவோம், உயர்வோம்!
First Published : Friday , 22nd August 2014 02:39:14 AM
Last Updated : Friday , 22nd August 2014 02:39:14 AM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.
சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.
பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.
யாரிடமும் சம்பளம் பற்றிக் கேட்காதீர்கள்.
எந்த ஒன்றையும் உபயோகப்படுத்தி விட்டு செல்லும் போது முன்பு இருந்ததைப் போல் அப்படியே வைத்து விட்டு செல்ல வேண்டும்.
உங்கள் குடும்பத்தினருடன் பேசவும், விளையாடவும், அன்பைக் காட்டவும் தயங்கக் கூடாது.
பிறரை எக்காரணம் கொண்டும் விமர்சிக்கக் கூடாது.
எவரையும் பழித்துப் பேசக் கூடாது.
வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலையும் ஒரு கலைவடிவத்தின் அங்கமாகப் பாருங்கள்.
எந்தச் சூழலையும் வீணாக்காதீர்கள்.
உங்களுக்குத் தேவையான முடிவுகளை நீங்களே எடுக்க முயற்சிக்க வேண்டும். பிறருடைய ஆலோசனையைக் கேட்டாலும் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.
பிறருடைய நற்பண்புகளைப் பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்.
வாழ்க்கையில் உயர உயர பணிவைக் கையாளுங்கள்.
எந்தவொரு பிரச்சினையையும் சற்றே விலகி இருந்து பாருங்கள்.
யாரையும் எதிரியாக நினைக்காதீர்கள்.
பிரச்சினைகளை கண்டு ஓடாமல் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கையும் அன்பையும் வைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
உங்கள் தனித்தன்மையை உணருங்கள். அதைப்பற்றி சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்.