tamilkurinji logo


 

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தடுக்கும் வழிமுறைகள்,pantri fever Swine Flu Virus Fever, Swine flu awarenes swine flu symptoms

pantri,fever,Swine,Flu,Virus,Fever,,Swine,flu,awarenes,swine,flu,symptoms




பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தடுக்கும் வழிமுறைகள்

First Published : Thursday , 26th February 2015 10:28:01 PM
Last Updated : Thursday , 26th February 2015 10:28:01 PM


பன்றிக் காய்ச்சல்  அறிகுறிகள்  தடுக்கும்  வழிமுறைகள்,pantri fever Swine Flu Virus Fever, Swine flu awarenes swine flu symptoms

பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது.

இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.

வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும்.


முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.


இந்த நோயை  முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.

1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.


ஸ்வைன் நோய்   வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?


ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.


ஸ்வைன் நோய் வராமல் தடுத்து  ஆரோக்கிய வாழ்வு வாழ.....
இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.

தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.


கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.

இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்


உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.


இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?


உங்களுக்கு இந்நோய்  இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும்.


இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.


இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லை என்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும்.


பிறகு, கைகளை நன்கு கழுவவும். ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.


கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது.


குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்

பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள்

* இடைவிடாத காய்ச்சல்

* மூக்கில் நீர்வடிதல்

* தொண்டையில் வலி

* வயிற்று போக்கு

* மயக்கம்

* பசியின்மை

* சளி தொல்லை

* சாப்பாடு மீது வெறுப்பு

* வாந்தி எடுத்தல்

எனவே மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் , உடனடியாக அரசாங்க மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறவும் .

குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?

* தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்

* மூச்சு விட சிரமப் படுவார்கள்

* உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்

* தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்

* அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்

* தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்

* தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்



பன்றிக் காய்ச்சல்  அறிகுறிகள்  தடுக்கும்  வழிமுறைகள்,pantri fever Swine Flu Virus Fever, Swine flu awarenes swine flu symptoms பன்றிக் காய்ச்சல்  அறிகுறிகள்  தடுக்கும்  வழிமுறைகள்,pantri fever Swine Flu Virus Fever, Swine flu awarenes swine flu symptoms பன்றிக் காய்ச்சல்  அறிகுறிகள்  தடுக்கும்  வழிமுறைகள்,pantri fever Swine Flu Virus Fever, Swine flu awarenes swine flu symptoms
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்
ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்  கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய

மேலும்...

 இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.

மேலும்...

 அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும்

மேலும்...

 இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in