பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள்

 பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை  கொடுத்த வாலிபர்கள்
டெல்லியில் பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியில் சஹரம்பூர் பயணிகள் ரயிலில், 16 வயதான 9-ம் வகுப்பு மாணவி தனது உறவினர் ஒருவருடன் பயணித்துள்ளார்.

அப்போது, ரயிலில் இருந்த மூன்று இளைஞர்கள் மாணவியின் உறவினரை தாக்கிவிட்டு, அம்மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இதுகுறித்து ரயில்வே காவல்துறை பெண் போலீஸ் அதிகாரி கிரண் ராஜ் கூறுகையில்,

 ‘9ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது நிரம்பிய மாணவி ஒருவர், தேர்வு முடிவை தெரிந்துகொண்டு பள்ளியிலிருந்து ரெயிலில் தனது உறவினருடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் அந்த ரெயில் பெட்டியில் அவர்கள் இருவருடன், மூன்று இளைஞர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இளைஞர்கள் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். அவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினரை அவர்கள் தாக்கினர்.

பின்னர், அவரை தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொண்ட அவர்கள், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன் பின்னர் வீடு திரும்பிய அம்மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

 பின்னர், இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மூன்று இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் மோஹித் என்பவர் ஆவார். ஆனால், மற்ற இருவரான பூபேந்தர் மற்றும் வினித் ஆகியோர் இப்போது வரை கைதுசெய்யப்படவில்லை. அதேநேரம், அவர்கள் வீடுகளில் தேடும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.
https://goo.gl/bYHVEL


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்