பழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது

பழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி உடனுறை சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார்.


இந்த சோமாஸ்கந்தர் சிலை, சிதிலமடைந்ததாக கூறி, 2009ஆம் ஆண்டு புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. மொத்த எடையில் 75 சதவிகிதம் தங்கத்தால் ஆன சோமாஸ்கந்தர் சிலை, அதே ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த சூழலில், 2015ஆம் ஆண்டு சோமாஸ்கந்தர் சிலையை பார்வையிட்ட ஸ்தபதி முத்தையா, அந்த சிலையில், ஆகம விதிப்படி குறைபாடு இருப்பதாகவும், எனவே, புதிய சிலை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தார்.

இதையடுத்து, அப்போது, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையராக இருந்த கவிதா தலைமையில், சிலை வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டது.

இதன்படி, மொத்த எடையில், 5 புள்ளி 45 கிலோ தங்கத்துடன் சோமாஸ்கந்தர் சிலையை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டு, தங்கம், வெள்ளி உள்ளிட்ட சிலை செய்ய தேவையான உலோகங்கள் திரட்டப்பட்டன.

பெரிய ஆலயங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடம் இருந்தும், தானமாக தங்கம் பெறப்பட்டது.

இதையடுத்து, சுவாமி மலை ஸ்தபதி மூலம் வடிவமைக்கப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை, 2016ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த உற்சவர் சிலை செய்வதற்காக பெறப்பட்ட தங்கத்திற்கு எந்த கணக்கு வழக்கும் இல்லை என்பதோடு, கோவிலில் உள்ள சிசிடிவிக்களை அகற்றவிட்டே சிலை வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தை அண்ணாமலை நாடினார். இதனை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி வீரமணி தலைமையிலான குழு, சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை முறைகேடு பற்றி விசாரணை நடத்தியது.

சில வாரங்களுக்கு முன்பு, ஐஐடி நிபுணர் குழு மூலம், சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், 5 புள்ளி 45 கிலோ அளவிற்கு தங்கம் இருந்திருக்க வேண்டிய நிலையில், பொட்டுத்தங்கம் கூட சிலையில் இல்லை என, ஐஐடி நிபுணர் குழு ஆய்வில் தெரியவந்தது.

மேலும், பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு தங்கம் பெற்றனர் என்பது பற்றிய பதிவேட்டை பராமரிக்காமல், முறைகேடாக தங்கம் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது.


மேலும், சிலை வடிவமைக்கப்பட்ட கால கட்டங்களில், கோவிலில் உள்ள சிசிடிவிக்களை திட்டமிட்டே அகற்றிவிட்டு, தங்கத்தை தானமாக பெற்றதும், அவற்றை கொண்டு சிலை செய்யாமல், முழுக்க முழுக்க முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்தது.


ஆகம விதிகளின்படி 86 கிலோ எடையில் செய்யப்பட்டிருக்க வேண்டிய சோமாஸ்கந்தர் சிலையை, பொட்டுத்தங்கத்தை கூட பயன்படுத்தாமல், 111 கிலோ எடையில் செய்து, அதனை பிரதிஷ்டை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிலையை செய்ய பரிந்துரை செய்த முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட 9 பேர் மீது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஸ்தபதி முத்தையா முன்ஜாமீன் பெற்றார்.

சிலை வடிவமைப்பு குழுவின் தலைவராக இருந்து, தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக உள்ள கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம் அழைத்துச் செல்லப்படும் அவர், அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்...
https://goo.gl/ZZmkLm


03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது