பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது

பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி என்பவர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில்  பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், வாழ்க்கை அறிவியல் கல்வித்துறை மாணவ-மாணவியர்கள் கடந்த 16-ம் தேதி கும்பலாக திரண்டு கடந்த கல்லூரி டீன் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். விசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இது குறித்து டீனிடம் கடிதம் கொடுத்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வசந்த் கஞ்ச் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்ட மாணவ-மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் இன்று போலீஸ் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி-ஐ இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதாக டெல்லி நகர போலீஸ் இணை கமிஷனர் அஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

https://goo.gl/1ekYpj


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை