tamilkurinji logo
 

பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும் ,Pirandai:Health Benefits Pirandai:Health Benefits | Uses, Organic Facts, Nutritional Pirandai Thuvaiyal | பிரண்டை துவையல் pirandai medicinal uses in tamil

Pirandai:Health,Benefits,Pirandai:Health,Benefits,|,Uses,,Organic,Facts,,Nutritional,Pirandai,Thuvaiyal,|,பிரண்டை,துவையல்,pirandai,medicinal,uses,in,tamil




பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்

First Published : Monday , 28th May 2018 11:52:34 AM
Last Updated : Monday , 28th May 2018 11:52:34 AM


பிரண்டையின் மருத்துவ  குணங்களும் சமையல்  குறிப்புகளும்
 ,Pirandai:Health Benefits Pirandai:Health Benefits | Uses, Organic Facts, Nutritional Pirandai Thuvaiyal | பிரண்டை துவையல் pirandai medicinal uses in tamil

நம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து  நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று பிரண்டை.

பிரண்டையின் மருத்துவ குணங்கள்.

செரிமானக் கோளாறைப் போக்கும்.
மலச்சிக்கலை நீக்கும்.
குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும்.
 உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
ஆண்மையைப் பெருக்கும்.
கப நோய்கள் நீங்கும்.
 பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.
எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும்.
பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியசத்துக்கள் உள்ளன.

 பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் சுவாச காசம் (ஆஸ்துமா) குணப்படும்.


பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டு வந்தால், கப நோய்கள் நீங்கும்.


பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர குடித்தால் எலும்புகள் பலம் பெறும்.


பிரண்டை சாற்றில் புளி, உப்பு, கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.


 கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி, நுரைத்த பச்சை பேதி தீரும்.

 
பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு தீரும்.


பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை புண்கள், தீராத நாட்பட்ட வயிற்றுவலி, மூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ், இரத்தம் வருதல் தீரும்.

 
சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி,பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.
 
பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.


நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.


வாரம் 2 முறை பிரண்டையை  பயன்படுத்தினால் 40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற நோயை   முழுவதும் குணப்படுத்தி விடலாம் என்கிறது சித்த மருத்துவம்.


எடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பராமரித்து  அதிக கொழுப்பைக் கரைக்கிறது.


இதனால் பருமன் மற்றும் ஊளைச்சதை குறைகிறது. நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை. 


இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதய நோய் உள்ளவர்களுக்கு பிரண்டை நல்ல  கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு அபாயம் தவிர்க்கப்படுகிறது.


பிரண்டை சமையல்

பிரண்டை துவையல்

தேவையான பொருள்கள்

பிரண்டை - 1 கப்
 தேங்காய் - அரை கப்
 உளுந்து- 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்-3
 கொத்தமல்லித் தழை- சிறிது
  கறிவேப்பிலை- சிறிது
 புளி- தேவைக்கு
 எண்ணெய் - 1 டீஸ்பூன்
 உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை

கடாயில் எண்ணெய் காய வைத்து உப்பு தவிர்த்து, பிரண்டை உள்ளிட்ட எல்லா பொருட்களையும் நன்கு வதக்கவும். ஆறியதும்  உப்புச் சேர்த்து அரைக்கவும். வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.
 

பிரண்டைக் குழம்பு

தேவையான பொருள்கள்

இளம் பிரண்டை- 1 கப்
 புளி- 20 கிராம்
சாம்பார் பொடி- 1 டேபிள்ஸ்பூன்
 காய்ந்த மிளகாய்- 4
பச்சை மிளகாய்- 2
 கறிவேப்பிலை- சிறிது
மிளகு, தனியா - தலா 1 டீஸ்பூன்
சீரகம், வெந்தயம்- தலா அரை டீஸ்பூன்
 வெல்லம்- சிறிது
உப்பு-  தேவைக்கேற்ப
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்.


செய்முறை.

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் காய வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். 


பிரண்டையை சுத்தம் செய்து, சின்னத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தாளித்த பொருட்களுடன் சேர்த்து பிரண்டையையும்  நன்கு வதக்கவும்.


சில துளிகள் எண்ணெய் விட்டு மிளகு, தனியா, சீரகம், வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.  பிரண்டை வதங்கியதும் புளிக்கரைசல் விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.


பிறகு வறுத்துப் பொடித்ததைச் சேர்க்கவும்.
  எல்லாம் சேர்ந்து குழம்புப் பதத்துக்கு வந்ததும், கடைசியாக வெல்லம் சேர்த்து, மீதி நல்லெண்ணெயை விட்டு இறக்கவும்.
பிரண்டையின் மருத்துவ  குணங்களும் சமையல்  குறிப்புகளும்
 ,Pirandai:Health Benefits Pirandai:Health Benefits | Uses, Organic Facts, Nutritional Pirandai Thuvaiyal | பிரண்டை துவையல் pirandai medicinal uses in tamil பிரண்டையின் மருத்துவ  குணங்களும் சமையல்  குறிப்புகளும்
 ,Pirandai:Health Benefits Pirandai:Health Benefits | Uses, Organic Facts, Nutritional Pirandai Thuvaiyal | பிரண்டை துவையல் pirandai medicinal uses in tamil பிரண்டையின் மருத்துவ  குணங்களும் சமையல்  குறிப்புகளும்
 ,Pirandai:Health Benefits Pirandai:Health Benefits | Uses, Organic Facts, Nutritional Pirandai Thuvaiyal | பிரண்டை துவையல் pirandai medicinal uses in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil
அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள்ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1

மேலும்...

 முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil
முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம்,

மேலும்...

 நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்
நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி  பார்க்கலாம்.1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள

மேலும்...

 சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.இதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் இதனை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதோடு அதில் சத்துக்களும் அதிகம் உள்ளது.விட்டமின் ஏ,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in