tamilkurinji logo


 

பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ,




செய்திகள் >>> தமிழகம்

பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ

First Published : Saturday , 24th December 2011 07:47:56 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ,

காரைக்குடிக்கு டிசம்பர் 26-ம் தேதி வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். அணையைப் பாதுகாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் போராட்டக் குழுவினருடன் ஒருபுறம் பேச்சு நடத்திக் கொண்டே மறுபுறம் 15 நாள்களில் அணு உலை செயல்படத் தொடங்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படும் பிரதமரை கண்டித்து, டிசம்பர் 26-ம் தேதி மாலை காரைக்குடியில் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும்." என்று கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, டிசம்பர் 26-ம் தேதி காரைக்குடி வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மதிமுக சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

இப்போராட்டத்தில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்." என்று கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீதியை நிலைநாட்டத் தவறிய பிரதமர் மன்மோகன் சிங்கை கண்டித்து டிசம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நாளை பிரதமர் வருகையின் போது கறுப்புக் காடிகாட்டப் போவதாக அறிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ, பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ, பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி
திமுகவில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.திமுகவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி

மேலும்...

 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in