tamilkurinji logo


 

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி - விஜயகாந்த் கைது,




செய்திகள் >>> தமிழகம்

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி - விஜயகாந்த் கைது

First Published : Monday , 26th December 2011 02:39:56 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி -  விஜயகாந்த் கைது,

சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த விஜயகாந்த் உள்ளிட்ட ஏராளமான தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தே.மு.தி.க.வினர் கருப்பு கொடி காட்டினர். சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து, பிரதமர் தங்கியிருந்த கிண்டி, ஆளுநர் மாளிகை நோக்கி விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஊர்வலமாகச் சென்றனர். சின்னமலை அருகே அவர்கள் தடையை மீறி சென்ற போது, விஜயகாந்த் உள்ளிட்ட சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் விஜயகாந்த் உடன் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு கைதாகினர்.

விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி -  விஜயகாந்த் கைது, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி -  விஜயகாந்த் கைது, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி -  விஜயகாந்த் கைது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in