tamilkurinji logo


 

பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார்,




செய்திகள் >>> தமிழகம்

பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார்

First Published : Monday , 26th December 2011 09:05:23 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார்,

பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார்.

தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சென்னை வந்தார். மாலை 4.20 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட அவர் மாலை 6.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

விமானத்தில் இருந்து, பிரதமர் இறங்கியதும், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதைத்தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யா பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஆளுநரைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதல்வரைத் தொடர்ந்து சென்னை மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, போலீஸ் டி.ஜி.பி.ராமானுஜம், முப்படை தளபதிகள் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங் கார் மூலம் ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று ராஜ்பவனில் தங்கி ஓய்வு எடுத்த பிரதமர் மன்மோகன் சிங் இன்று (திங்கட்கிழமை) காலை 9.40 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு செல்கிறார்.

அங்கு நடைபெறும் கணிதமேதை ராமானுஜத்தின் 125-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் பேசுகிறார். விழா முடிவடைந்ததும் அங்கிருந்து நேராக விமான நிலையம் சென்று, விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடி சென்று, அங்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராமானுஜர் மையத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் மணகிரியில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து காரைக்குடியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார், பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார், பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in