tamilkurinji logo
 

பிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர் ,Telangana man sends PM Modi cheque for 9 paise to protest fuel price hike tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Telangana,man,sends,PM,Modi,cheque,for,9,paise,to,protest,fuel,price,hike,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
செய்திகள் >>> இந்தியா

பிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்

First Published : Tuesday , 5th June 2018 07:55:19 PM
Last Updated : Tuesday , 5th June 2018 07:55:19 PM


பிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்
 ,Telangana man sends PM Modi cheque for 9 paise to protest fuel price hike tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 9 காசுகள் கொண்ட காசோலையைப் பிரதமர் மோடிக்கு நலநிதிக்காக அனுப்பிவைத்துள்ளார்.


கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் மே 14-ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.

ஆனால், கர்நாடகாவில் தேர்தல் முடிந்தபின், தொடர்ந்து 15 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயத்தின. இதனால், பெட்ரோல் ஒருலிட்டர் அதிகபட்சமாக ரூ.82க்கும், டீசல் ரூ.73க்கும் விற்பனையானது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலில் சில காசுகளை பெயரளவுக்குக் குறைத்து வருகின்றன. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசலில் வெறும் ஒரு காசு மட்டும் குறைத்து வெறுப்பேற்றினார்கள்.

எண்ணெய் நிறுவனங்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், அதை பெரும்பாலும் வெளியில் காட்டாமல் மக்கள் தங்களின் அன்றாட பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ராஜன்னா சர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த சந்து கவுட் என்றஇளைஞர் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 9 காசு காசோலையை அனுப்பியுள்ளார்.

ராஜன்னா சிர்சில்லா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா பாஸ்கர் நேற்று பிரஜா வாணி திட்டத்தில் பஙகேற்று இருந்தார்.


அப்போது அங்கு வந்த சந்து கவுட், தன்னிடம் இருந்த 9 காசுக்கான காசோலையை பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்துவிடுமாறு கூறி அதை ஆட்சியரிடம் அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண பாஸ்கர் அதைப் பெற்றுக்கொண்டு அந்த இளைஞரை அனுப்பிவைத்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் உழுவதற்கும், மற்ற வேலைகள் செய்வதற்கும் டிராக்டர்களுக்கு போதுமான டீசல் எரிபொருளை நிரப்பமுடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இதைக்கண்டித்தும், மோடியைக் கிண்டல் செய்தும் இந்த காசோலையை அளித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்
 ,Telangana man sends PM Modi cheque for 9 paise to protest fuel price hike tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்
 ,Telangana man sends PM Modi cheque for 9 paise to protest fuel price hike tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்
 ,Telangana man sends PM Modi cheque for 9 paise to protest fuel price hike tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி
அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை துண்டு துண்டாக எலி கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.தின்சுக்கி நகரின் லாய்புளி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம்

மேலும்...

 கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. வழக்கு
பாஜக எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்தில் 6வது நாளாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவைத் தொடர்ந்து

மேலும்...

 கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும்

மேலும்...

 பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in