பீ.எஸ்.இ. சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு

பீ.எஸ்.இ. சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு
திங்கள்கிழமையன்று பங்கு வியாபாரம் சுமாராக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்தது.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

இதனால் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் சாதனங்கள், மோட்டார் வாகனம் ஆகிய துறையை சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை நன்கு உயர்ந்தது. அடிப்படை கட்டமைப்பு, சிமெண்டு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் ஏற்றம் பெற்றது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனப் பங்கின் விலை 5 சதவீதம் அதிகரித்தது. மேலும் சில வாகன நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. இன்ஃபோசிஸ் பங்கு விலை 2.96 சதவீதம் அதிகரித்தது. ஐ.டி.சி., ஐ.வி.சி.ஆர்.எல்., என்.சி.சி., டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.

பங்கு வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 61.17 புள்ளிகள் உயர்ந்து 18,823.91 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,838.54 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 18,745.28 புள்ளிகளுக்கும் சென்றது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் ஓரளவு நன்றாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி, 15.50 புள்ளிகள் உயர்ந்து 5,718.80 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,722.95 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,694 புள்ளிகளுக்கும் சென்றது. இச்சந்தையில் 991 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 533 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

இன்று விடுமுறை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2) மும்பை, தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அன்னிய செலாவணி சந்தைக்கும் இன்று விடுமுறை என வர்த்தகர்கள் தெரிவித்தனர். விளைபொருள் வர்த்தக சந்தைகளில் சர்க்கரை, உலோகம், எண்ணெய், பருத்தி ஆகிய பொருள்களுக்கான சந்தைகளும் மூடப்பட்டு இருக்கும் என தெரிகிறது. எனினும் தங்கம் - வெள்ளி வர்த்தகம் வழக்கம்போல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
https://goo.gl/rR6Bg1






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்