tamilkurinji logo


 

புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா,3000 new buses jayalalitha order

3000,new,buses,jayalalitha,order




செய்திகள் >>> தமிழகம்

புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா

First Published : Thursday , 29th December 2011 08:51:41 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா,3000 new buses jayalalitha order

6 ஆண்டுகள் ஓடிய பழைய பஸ்களுக்கு பதிலாக, ரு.435 கோடி செலவில் 3000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அண்டை மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன.

இப்போக்குவரத்துக் கழகங்கள் 21 ஆயிரத்து 169 பேருந்துகளை இயக்குவதன் மூலம் தேசிய அளவில் மிகப்பெரிய போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களாக விளங்குகின்றன. நாளொன்றுக்கு 2.10 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். சென்னை பெருநகரப் பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு 55 லட்சத்திற்கும் மேல் பயணிகள் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் பழுதுபட்ட பேருந்துகளால், பொதுமக்களுக்கு இடைïறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இவற்றை சீர்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புதிய பேருந்துகளை வாங்கிடவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், 6 வருடங்கள், அல்லது 7 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்பட்ட பழைய பேருந்துகளுக்கு மாற்றாக, ரூ.434 கோடியே 75 லட்சம் செலவில் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முதற்கட்டமாக 520 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.75 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

மேலும், மக்களின் குடியேற்றம் காரணமாக, மாநிலத்தின் கிராமம் மற்றும் நகர்ப் பகுதிகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன. போக்குவரத்து ஒன்றே, விரிவடையும் பகுதிகளை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. எனவே, பெருகி வரும் மக்களின் போக்குவரத்து தேவைகளை, புதிய பேருந்துகள் வாங்குவதினால் மட்டுமே பூர்த்தி செய்ய இயலாது என்பதாலும், மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய அதிக அளவு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு நிதிநிலைமை ஏற்புடையதாக இல்லை என்பதாலும், நல்ல நிலையில் உள்ள என்ஜின் மற்றும் அடிச்சட்டம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவது சீரிய நடவடிக்கையாக அமையும் என்பதாலும், வயது முதிர்ந்த மற்றும் பழுதடைந்த பேருந்துகளில் அடிச்சட்டம் மற்றும் என்ஜின் நல்ல நிலையிலுள்ள பேருந்துகளை கண்டறிந்து, அவைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையில், முதற்கட்டமாக 1,432 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவற்றை ரூ.97 கோடியே 58 லட்சம் செலவில் புதுப்பிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்துத்துறையில் எடுக்கப்படும் இந்நடவடிக்கைகளினால், தமிழக மக்கள் சிறந்த போக்குவரத்து வசதிகளை பெறுவதற்கு ஏதுவாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா,3000 new buses jayalalitha order புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா,3000 new buses jayalalitha order புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா,3000 new buses jayalalitha order
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்
மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது. உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற

மேலும்...

 போலீஸ் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன? : ரவுடி ஆனந்தன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சாண்டில்யன் நேரில் சென்று ஆய்வு செய்தார். குற்றவாளிகள், ரவுடிகள் அத்துமீறும் பட்சத்தில், கடும் நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.சென்னை

மேலும்...

 சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40

மேலும்...

 ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி - திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டனர். இதனால் பதவி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in