tamilkurinji logo
 

புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி ,RBI introduces new Rs 10 banknotes in 'chocolate brown' colour tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

RBI,introduces,new,Rs,10,banknotes,in,'chocolate,brown',colour,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

First Published : Friday , 5th January 2018 07:22:31 PM
Last Updated : Friday , 5th January 2018 07:22:31 PM


புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி ,RBI introduces new Rs 10 banknotes in 'chocolate brown' colour tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

10 ரூபாய் நோட்டில் கடந்த 2005-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.

அதன்பிறகு தற்போதுதான் மாற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நோட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தாலும் பழைய ரூ.10 நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் உள்ள இந்த நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தியின் உருவப்படமும் பின்புறத்தில் கோனார்க் சூரிய கோயிலின் படமும் அச்சிடப்பட்டுள்ளது.

63 மிமீ x 123 மிமீ என்ற அளவில் இந்த நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் இரண்டு பக்கங்களிலும் பல்வேறு வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. ரூ.10 என்பது தேவநகரி மொழியில் எழுதப்பட்டுள்ளது.

நோட்டின் பின்புறத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் இலச்சினையும் உள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரூ.2,000, ரூ500 மற்றும் ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

தவிர 50 ரூபாய் நோட்டின் வடிவத்தை மாற்றி அமைத்தது. அதனைத் தொடர்ந்து 10 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது.

போலி நோட்டுகளை தடுப்பதற்காக மத்திய அரசு ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மாற்றி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி ,RBI introduces new Rs 10 banknotes in 'chocolate brown' colour tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி ,RBI introduces new Rs 10 banknotes in 'chocolate brown' colour tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி ,RBI introduces new Rs 10 banknotes in 'chocolate brown' colour tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in