tamilkurinji logo


 

புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த் ,




செய்திகள் >>> தமிழகம்

புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த்

First Published : Monday , 26th December 2011 03:20:01 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த் ,

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தே.மு.தி.க.வினர் கருப்பு கொடி காட்டினர். சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து, பிரதமர் தங்கியிருந்த கிண்டி, ஆளுநர் மாளிகை நோக்கி விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஊர்வலமாகச் சென்றனர். சின்னமலை அருகே அவர்கள் தடையை மீறி சென்ற போது, விஜயகாந்த் உள்ளிட்ட சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட விஜயகாந்த் தியாகராயநகர் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த் கூறியதாவது, "முல்லைப்பெரியாறு பிரச்சினையில் எனது உணர்வுகளை, கட்சி உணர்வை எடுத்து காட்டும் வகையில் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினோம். முதலில் 2 அடுக்கு பாதுகாப்பு என்றார்கள். பிறகு 4 அடுக்கு பாதுகாப்பு என்றார்கள். அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தாலும் சரி எங்களது போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.

முல்லைப்பெரியாறு பிரச்சினை ஆகட்டும், தமிழக மீனவர்கள் பிரச்சினையாகட்டும், காவிரி பிரச்சினையாகட்டும் எல்லா விஷயங்களிலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. கேரளா - கர்நாடகா மாநிலங்கள் தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகின்றனர். இந்த பிரச்சினையில் அடுத்த கட்டமாக புதுமையான போராட்டம் நடத்துவேன்.

2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திறக்கும் ஆஸ்பத்திரி, அதேபோல் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் திறக்கும் ஆஸ்பத்திரி ஆகிய விழாக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கணிதமேதை ராமானுஜன் விழாவில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது.

இந்த அரசு விழாவை காரணம் காட்டிதான் தனியார் விழாக்களுக்கு செல்கிறார்கள். வித்தை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். திருச்சியில் இருந்து விமானத்தில் பறந்து செல்கிறார் பிரதமர். இதுதான் தமிழக மக்களுக்கு அவர் செய்யும் நல்லகாரியமா? முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு கருணாநிதி ஆட்சி காலத்திலேயே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அப்போது கூட்டணி கட்சியில் இருந்ததால் அதை செயல்படுத்தாமல் விட்டு விட்டார்கள். கருணாநிதியும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமரை சந்திப்பது, மனு கொடுப்பது என்று மாறி மாறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் மற்ற கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தினால், நானும் அவர்களுடன் இணைந்து போராட தயாராக இருக்கிறேன்.

முல்லைப்பெரியாறு பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் தென்மாவட்ட மக்களை பார்த்திருக்க வேண்டியதுதானே! எங்களது போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் கைதாகி இருக்கிறார்கள். சென்னையில் 5 ஆயிரம் பேர் கைதாகி இருக்கிறார்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.

புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த் , புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த் , புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த் ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in