tamilkurinji logo


 

புனேயில் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி, 40பேர் படுகாயம்,




செய்திகள் >>> இந்தியா

புனேயில் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி, 40பேர் படுகாயம்

First Published : Sunday , 14th February 2010 05:51:04 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM



புனேயின் கோரேகான் பூங்கா பகுதியில் உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாயினர்; 40 பேர் படுகாயம்அடைந்தனர். இறந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டவர் என்று தெரிய வந்துள்ளது. பேக்கரியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை பேக்கரி ஊழியர் ஒருவர் திறநது பார்க்க முயன்றபோது அதில் இருந்த குண்டு வெடித்தது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயின் கோரேகான் பகுதியில் உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில், நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். வெளிநாட்டினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சசூன், ஜஹாங்கிர் மற்றும் உத்ராணி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் வெளிநாட்டவர்களும் இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின்னே, இதுகுறித்த உறுதியான தகவல் தெரியும்.

புனேயின் கண்டோன்மென்ட் பகுதியில் ஓஷோ ஆசிரமம்,இஸ்ரேல் மையம் ஆகியவற்றுக்கு அருகில் ஜெர்மன் பேக்கரி உள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் நேரில் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இது சிலிண்டர் வெடிவிபத்து அல்ல என்றும், பயங்கரவாத தாக்குதல் தான் என்றும் தெரிவித்தார். புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி, வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால், தாக்குதலுக்கு இந்த இடத்தை பயங்கரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என கூறினார். இதே கருத்தை மத்திய பாதுகாப்புத்துறை செயலர் ஜி.கே. பிள்ளையும் கூறியுள்ளார். சி.பி.ஐ., ஃபாரன்சிக் அமைப்பு, மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் புனே விரைந்துள்ளனர்.

ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் பலியான 12 பேரில் ஐந்து பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டவர். ஆஸ்ரமத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் விரும்பி இந்த பேக்கரிக்கு வருவது வழக்கம். இதனால் இந்த பேக்கரியை லக்ஷர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவரும், பாகிஸ் தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல் மென் ஹெட்லி என்பவர் நோட்டமிட்ட விபரம் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். விரைவில் இந்தியா, பாக்., இடையே பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில் அதை கெடுக்கும் வகையிலும், வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்கு பயம் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பேக்கரியில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பார்சலை, வெயிட்டர் ஒருவர் திறந்துபார்த்த போது குண்டுவெடித்ததாக பேக்கரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விளக்க வருமாறு முதல்வர் அசோக் சவானுக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

இந்த சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும், இதுகுறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இறுதியில் தான் இது பயங்கரவாதிகளின் செயலா, இல்லையா என்று கூற முடியும் என்றும், இந்தியாவில் வாழும் வெளிநாட்டுப் பயணிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியா மீது அயல்நாடுகள் வைத்திருக்கும் மதிப்பை சீர்குலைக்கப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், போர்ஸ் ஒன் உள்ளிட்ட படையினர் முகாமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா எந்தவகை தாக்குதல்களையும் திறமை பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.



புனேயில் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி, 40பேர் படுகாயம், புனேயில் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி, 40பேர் படுகாயம், புனேயில் குண்டுவெடிப்பு : 12 பேர் பலி, 40பேர் படுகாயம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in