tamilkurinji logo


 

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு,




செய்திகள் >>> இந்தியா

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு

First Published : Tuesday , 16th February 2010 06:37:30 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு,

கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.

நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றும், மத்திய அரசின் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் ரூ.46 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டவும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்துமாறு மத்திய அரசை பெட்ரோலிய துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

அத்துடன் மத்திய அரசின் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சமாளிக்க அவற்றுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்குமாறு பெட்ரோலிய துறை மந்திரி முரளி தியோரா நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை கேட்டுக் கொண்டார். ஆனால் கூடுதல் நிதி ஒதுக்க இயலாது என்று அவர் கூறிவிட்டார்.

ஆனால் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

என்றாலும் எண்ணை நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது.

கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசிடம் இருந்து விடுவிக்குமாறு பெட்ரோலிய துறை அமைச்சகம் வற்புறுத்தி வருகிறது. மத்திய அரசின் மானிய சுமையை கட்டுப்படுத்தும் வகையிலான இந்த யோசனைக்கு நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியும் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கருதப்படுகிறது.

அப்படி விலை நிர்ணய அதிகாரம் மத்திய அரசிடம் இருந்து விடுவிக்கப்படும் பட்சத்தில், எண்ணை நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிக்கும்.

2010-11-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி வருகிற 26-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அப்போது இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.

இந்த தகவலை பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு 4 ரூபாய்க்கு குறைவாகவும், டீசல் விலை உயர்வு லிட்டருக்கு 2 ரூபாய்க்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என்று பெட்ரோலிய துறை அமைச்சகம் விரும்புவதாகவும் அவர் கூறினார். இதேபோல் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.20 முதல் ரூ.25 வரையும், மண்எண்ணையின் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

என்றாலும் பட்ஜெட் தாக்கலாக இருப்பதால் இன்னும் சுமார் 10 நாட்களுக்கு விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.


பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in