tamilkurinji logo


 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது இல்லை,




செய்திகள் >>> இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது இல்லை

First Published : Monday , 15th February 2010 06:10:47 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது இல்லை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திய பிறகே விலை உயர்வு அறிவிக்கப்படும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துமாறு வல்லுனர் குழு பரிந்துரை அளித்தது. மேலும், தற்போதைய விலையின் காரணமாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.46 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்துமாறு பெட்ரோலிய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கடந்த வாரம் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்படவில்லை. எனினும், பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா மனு அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை பெட்ரோலிய துறை மந்திரி முரளி தியோரா நேற்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் இழப்பை சமாளிப்பதற்காக கூடுதல் மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் முரளி தியோரா வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது வழங்கப்படும் ரூ.12 ஆயிரம் கோடியை விட அதிகமாக எதுவும் தர முடியாது என நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உறுதியாக கூறி விட்டார். அதற்கு பதிலாக, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2 முதல் ரூ.3 வரையும் சமையல் கியாஸ் விலையில் சிலிண்டருக்கு ரூ.25 வரையும் உயர்த்தலாம் என இரண்டு மந்திரிகளும் கருதுகின்றனர்.

ஆனால், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இரண்டு பேரும் நேற்று ஆலோசனை நடத்திய போதும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த சந்திப்பு குறித்து பெட்ரோலிய துறை செயலாளர் சுந்தரேசன் கூறுகையில், "பெட்ரோல் நிறுவனங்களின் வருவாய் இழப்பு குறித்தும் விலை உயர்வு தொடர்பான கிரித் பாரிக் அறிக்கை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை'' என்றார்.

கிரித் பாரிக் அளித்த பரிந்துரையில் பாதி அளவுக்காவது விலையை கூட்ட வேண்டும் என பெட்ரோலிய துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 அல்லது ரூ.1-ம் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.25-ம், மண்ணெண்ணை விலையை லிட்டருக்கு ரூ.1-ம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

எனினும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். அதுவரை, பெட்ரோல் விலை உயர்வை தள்ளிப்போட இரண்டு மத்திய மந்திரிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது இல்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது இல்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது இல்லை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in