tamilkurinji logo


 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்,DMK to participate in Bharat Bandh on Sep 10

DMK,to,participate,in,Bharat,Bandh,on,Sep,10




செய்திகள் >>> தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்

First Published : Friday , 7th September 2018 01:34:38 PM
Last Updated : Friday , 7th September 2018 01:34:38 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்,DMK to participate in Bharat Bandh on Sep 10

பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு  திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பந்த் வெற்றியடைய திமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்,DMK to participate in Bharat Bandh on Sep 10 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்,DMK to participate in Bharat Bandh on Sep 10 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்,DMK to participate in Bharat Bandh on Sep 10
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in