tamilkurinji logo
 

பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses

maravalli,kilangu,medicinal,uses


பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்

First Published : Tuesday , 1st August 2017 07:03:59 PM
Last Updated : Tuesday , 1st August 2017 07:03:59 PM


பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின்  மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses

மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும்.


தமிழ்நாடு, கேரளா என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு.

 உணவுப்பொருளான மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு தொழிற்சாலைகளில் - குறிப்பாக நொதித்தல் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
 
88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான  மருத்துவப் பயன்கள் கொண்டது.ஆரோக்கியமான பருமனுக்கு  உதவுகிறது.
 
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்... முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.
 
 ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.

 


பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின்  மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின்  மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின்  மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கறிவேப்பிலை டீ | curry leaves tea
‘கறிவேப்பிலை டீ' தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - ஒரு கப் தண்ணீர் - 2 கப் சீரகம் - சிறிதளவு வெல்லம் - சிறிதளவு கருப்பு உப்பு - சிறிதளவு செய்முறை : 1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில்

மேலும்...

 அல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil
அல்சர் என்பது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகை புண். இது பாதிக்கப்பட்டவரை பலவித தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களை (Antibiotics) பயன்படுத்தி இதன் வீரியத்தை குறைக்கலாம். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளை சாப்பிடலாம்,

மேலும்...

 வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil
காரட் சாறு எடுத்து, சர்க்கரை மற்றும் உப்பு என எதுவும் சேர்க்காமல் வெறுமனே குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்களுக்கு சாப்பிட்டால் உங்கள் வாய் நாற்றம் காணாமல் போய்விடும்.ஒரு  ஸ்பூன்  தேன் , அரை  ஸ்பூன் பட்டைதுாள் , இரண்டு  எலுமிச்சை  

மேலும்...

 கணவன் மனைவி உறவில் விரிசல் வராமல் இருக்க மனைவியை ரசியுங்கள்
இல்லற வாழ்க்கை இனிமையாகவும், சுமுகமாகவும் தொடர்வதற்கு கணவன் ஒருசில விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திர யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருவரில் கோபத்தை தூண்டும் வகையில் யார் பேசினாலும் மற்றொருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.ஆத்திரத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in