பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் :அதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள்| Prevention of Urinary Tract Infections in Women

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்று அறிகுறிகள் :அதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள்| Prevention of Urinary Tract Infections in Women
 அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல்  வேலை நேரத்தில்  சிறுநீர்  வெளியேறுவதும்  பெண்கள்  எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. வயதானவர்கள்  மட்டுமல்ல  இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பல  காரணங்கள் இருக்கின்றன.


பொதுவாக, சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.


தொடர் பிரசவம், மாதவிடாய் காலத்திற்கு பின், சிறுநீர் பாதையில் ஏற்படும் சுருக்கம் ஆகியவற்றால், பெண்களுக்கு இப்பிரச்னை உண்டாகிறது.


சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சீராக சிறுநீர் வெளியேறாதது, அடி வயிறு வலிப்பது, காய்ச்சல் போன்றவை, இதன் அறிகுறிகள். சிறுநீர் தொற்று பெரும்பாலும், பாக்டீரியா வகை தாக்கத்தால் தான் ஏற்படுகிறது.


 இதற்குரிய சிறுநீர் பரிசோதனை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில், "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனை ஆகியவை செய்து, சிறுநீரகவியல் நிபுணரின் ஆலோசனைப்படி, சிகிச்சை மேற்கொண்டால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.


அவற்றை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்



தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீரில் வெட்டி வேர் போட்டு குடிக்கலாம்.

* உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணி, செளசெள, சுரைக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பழங்களில் தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காயை பச்சடி செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.

* கால் கட்டை விரலில் வெள்ளை சுண்ணாம்பு வைத்தால் சிறுநீரால் ஏற்படுகிற கடுப்பு குறையும்.


* நீர் மோர் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேணடும்.

* நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி பவுடர் வாங்கி கசாயம் செய்து குடிக்கலாம்.
 சூடான நீரில் சீரகத்தை சிறிது போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிடலாம்.

* வெந்தயத்தை மோரிலோ அல்லது இளநீரிலோ ஊற வைத்து குடிக்கலாம்.


* சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை பச்சையாக சாப்பிடலாம். உடல் சூடு தணிந்து சிறுநீரகத் தொற்று சரியாகும்.


நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.  நெல்லிக்காய் ஜூஸ்கள் பாக்டீரியாவை அழிக்கவல்லது
. சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே நாள் ஒன்ரறுக்கு 2 டம்ளர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.


ஒரு புதிய தினத்தை ஒரு டம்ளார் வெந்நீருடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதுடன் தொடங்குங்கள். எலுமிச்சை சாற்றில், இரத்தம் மற்றும் சிறுநீர் பாதையின் கார அளவை மாற்றக்கூடிய தன்மை உள்ளது.

அதன் காரணமாக பாக்டீரியா பரவல் கட்டுப்படுகின்றது. சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகு வேண்டும்.
https://goo.gl/Pwyvw3






17 Jun 2019

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்

06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்