tamilkurinji logo


 

போனில் மகனை வரவழைத்து விட்டு திருச்சி தொழில் அதிபர் மனைவியுடன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

போனில் மகனை வரவழைத்து விட்டு திருச்சி தொழில் அதிபர் மனைவியுடன் தற்கொலை

First Published : Monday , 28th May 2018 01:22:53 PM
Last Updated : Monday , 28th May 2018 01:22:53 PM


போனில் மகனை வரவழைத்து விட்டு திருச்சி தொழில் அதிபர் மனைவியுடன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர், தேவர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). இவரது மனைவி லீலா.


இந்த தம்பதியினரின் ஒரே மகன் ராஜேஷ் (22). என்ஜினீயரிங் முடித்த இவர் ஐ.ஏ.எஸ். போட்டித்தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வருகிறார்.

வெங்கடேசன் வீடுகள் கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். லீலா குடும்ப தலைவியாவார்.இந்தநிலையில் வெங்கடேசனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.


கட்டிய வீடுகள் சில விற்பனையாகாமல் இருந்தது. வீடு கட்டுவதற்காக அவர் வங்கி மற்றும் தனிநபர்களிடம் ரூ.3 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கட்டிய வீடுகள் விற்பனையாகாமல் இருந்ததால் கடனுக்கு வட்டி ஏறியது. மேலும் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்க தொடங்கினர்.


வங்கியில் இருந்தும் கடனை திருப்பி செலுத்த அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்ய நினைத்து, இதனை தனது மனைவியிடமும் தெரிவித்தார்.

இதையடுத்து இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவை எடுத்தனர். இருப்பினும் தங்களின் ஒரே மகனை நினைத்து இருவரும் கண்ணீர் சிந்தினர்.

பின்னர் மனதை தேற்றிக்கொண்டு, சென்னையில் உள்ள மகன் ராஜேசை செல்போனில் தொடர்பு கொண்டு திருச்சி வருமாறும், பழனி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றும் தந்தை வெங்கடேசன் கூறினார்.


இதையடுத்து அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.

அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், ராஜேஷ் தனது தந்தையின் செல்போனை தொடர்புகொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.

அங்கு வீட்டில் ஊஞ்சல் கம்பியில் தந்தை வெங்கடேசன், தாய் லீலா இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார்.


இதையடுத்து அக்கம், பக்கத்தினரும் அங்கு வந்தனர். பின்னர் பூட்டிய கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ராஜேஷ், தாய் மற்றும் தந்தையின் உயிரற்ற உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்த கணவன், மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தை தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வெங்கடேசன் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.


அந்த கடிதத்தில் எங்களது (வெங்கடேசன்-லீலா) உடல்களை மீண்டும் இந்த வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். நாங்கள் இறந்ததை உறவினர்கள் யாருக்கும் சொல்ல வேண்டாம் என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது அவர்களது உறவினர்கள் சோகத்துடன் மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர்.


பிரேத பரிசோதனை முடிந்ததும் 2 பேரின் உடல்களும் ராஜேஷ் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உடல்களை நேரடியாக ஓயாமரி சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவுடன் வெங்கடேசன் தனது மகனையும் திருச்சிக்கு அழைத்திருக்கலாம் என்றும், ஆனால் கடைசியில் மகனை விட்டு, விட்டு மனைவியுடன் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.


கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

போனில் மகனை வரவழைத்து விட்டு திருச்சி தொழில் அதிபர் மனைவியுடன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema போனில் மகனை வரவழைத்து விட்டு திருச்சி தொழில் அதிபர் மனைவியுடன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema போனில் மகனை வரவழைத்து விட்டு திருச்சி தொழில் அதிபர் மனைவியுடன் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in