பைக் விற்பணை : ஸ்பிளண்டர் முதலிடம்

பைக் விற்பணை : ஸ்பிளண்டர் முதலிடம்
அக்டோபர் மாதம் ஹீரோ ஸ்பிளண்டர் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது.

இதேபோன்று, ஹீரோ நிறுவனத்தின் விற்பனையும் 5 லட்சத்தை தாண்டியது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து சரிந்து வந்தது.

ஹோண்டா நிறுவனம் தனியாக பிரிந்ததன் எதிரொலியாகவே இது இருந்தது. பல ஆண்டுகளாக விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பிளண்டர் விற்பனையை செப்டம்பரில் பஜாஜ் டிஸ்கவர் முந்தியதால் ஹீரோ கலக்கமடைந்தது.

இந்த நிலையில், கடந்த அக்டோபரில் ஸ்பிளண்டர் விற்பனை மீண்டும் முதலிடத்துக்கு வந்தது. கடந்த மாதம் மொத்தம் 1.80 லட்சம் ஸ்பிளண்டர்
பைக்குகள் விற்பனையாகியிருக்கிறது.

அதேவேளை, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1.52 லட்சம் டிஸ்கவர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஸ்பிளண்டர் கொடுத்த உற்சாகம் காரணமாக கடந்த மாதம் ஹீரோவின் விற்பனை மீண்டும் 5 லட்சத்தை தாண்டியது.

பஜாஜ் ஆட்டோ 2.62 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து இரண்டாவது இடத்திலும், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2.36 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

விற்பனை ஏற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹீரோ சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் அனில் துவா பேசுகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் எங்களது மார்க்கெட் பங்களிப்பு 45.3 சதவீதத்திலிருந்து 42.7 சதவீதமாக குறைந்திருந்தது.

ஆனால், வரும் மாதங்களி்ல் இது சரியாகிவிடும். இதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேலும், கடந்த மாதம் முதல் 15 நாட்கள் நாங்கள் விற்பனை செய்த அளவுதான் பிற நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை.

எனவே, முதலிடத்தை தொடர்ந்து தக்க வைப்போம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என்றார்.
https://goo.gl/MpDZ2D






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்