tamilkurinji logo


 

பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் : சிதம்பரம் அறிவிப்பு,




பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் : சிதம்பரம் அறிவிப்பு

First Published : Wednesday , 24th April 2013 09:13:48 PM
Last Updated : Wednesday , 24th April 2013 09:13:48 PM


பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் : சிதம்பரம் அறிவிப்பு,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) அமல்படுத்தப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பான, 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இதற்கான மசோதா மற்றும் அரசியல் சாசன சட்ட திருத்த முன்வரைவு அறிக்கையை தயாரிக்குமாறு, அதிகாரமிக்க அமைச்சரவை குழு, உத்தரவிட்டுள்ளது.

இக்குழு, வரைவு அறிக்கைக்கு, ஒப்புதல் அளித்து, பார்லிமென்டில் மசோதா நிறைவேறினால், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம் முடிய, இன்னும் 13மாதங்கள் உள்ளன. அதற்குள், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வர, 70 சதவீத வாய்ப்பு உள்ளது.

ஜி.எஸ்.டி., நிலம் கையகப்படுத்தல் சட்டம், காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு போன்ற சீர்திருத்தங்களை அமல்படுத்த, ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.,வும் ஒருமித்த கருத்துடன், இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவிற்கு, 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டக் கூடிய தகுதி உள்ளது. அந்த இலக்கை அடையவில்லை என்றால், நாம் சரியாக செயல்பட வில்லை என்றுதான் பொருள். அதே சமயம், வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. இவ்வாறு, நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் : சிதம்பரம் அறிவிப்பு, பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் : சிதம்பரம் அறிவிப்பு, பொது தேர்தலுக்கு முன்பாக சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்படும் : சிதம்பரம் அறிவிப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில்

மேலும்...

 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in