மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது

மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தால் முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழைய சீவரத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மோனிகா (32).

இருவரும் பெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்நிலையில், மோனிகா வேலை முடிந்து வீட்டுக்கு தாமதமாக வருவது வழக்கம் என கூறப்படுகிறது.


அதேபோல் நேற்று முன்தினமும், மோனிகா தாமதமாக வந்துள்ளார். அதை யுவராஜ் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், இருவரும் சாப்பிடாமல் வீட்டில் படுத்துவிட்டனர். சிறிது நேரத்தில் மோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அலறியபடி யுவராஜ் ஓடி வந்தார்.  சத்தம் கேட்டு யுவராஜின் தந்தை ஓடி வந்தார். அப்போது, மோனிகாவின் கழுத்து புடவையால் இறுக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, அவர் யுவராஜிடம் கேட்டபோது, ‘‘என்னிடம் சண்டை போட்டதில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பட்டாவை அறுத்து நான் கீழே இறக்கினேன்’’ என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.  

  தகவலறிந்து, பாலூர் எஸ்ஐ லட்சுமி விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, யுவராஜிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில்  பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
யுவராஜி போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம்:

‘‘எனக்கும், மோனிகாவுக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இருவரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம். வரும் ஜூன் 2ம் தேதி எங்களது மகளுக்கு காதுகுத்த முடிவு செய்தோம். அதற்காக சென்னை தி.நகருக்கு சென்று துணிகள் எடுத்து விட்டு வரலாம் என்று மோனிகாவிடம் கூறினேன்.


அதற்கு அவர், சோகண்டியில் வசிக்கும் தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டு மதியத்துக்கு பிறகு செல்லலாம் என்றார். நானும் அதற்கு சம்மதித்தேன்.

தனது அம்மாவீட்டுக்கு சென்றுவருவதாக சென்ற மோனிகா மதியம் 3 மணியாகியும் திரும்பி வரவில்லை. உடனே, மாமியாருக்கு போன் செய்தேன். அப்போது, ‘‘மோனிகா வரவில்லை’’ என்று மாமியார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்தேன். 3.30 மணிக்கு மேல் மோனிகா வீட்டுக்கு வந்தார்.

அவரிடம், ‘‘எங்கு சென்றாய்’’ என்று கேட்டேன். மழுப்பலான பதிலை சொன்னார். நானும் விட்டு விட்டேன். மதியம் சாப்பிடவில்லை. இரவாகியது. 8 மணியளவில், மீண்டும் எங்கு சென்றாய் என்று மோனிகாவிடம் கேட்டேன். அப்போதும் சரியாக பதில் சொல்லவில்லை.

மோனிகாவுக்கு ஏற்கனவே வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்தது எனக்கு தெரியவந்தது. அதனால், 6 மாதங்களாக மோனிகாவை வேலைக்கு அனுப்பவில்லை.


அதற்கு பிறகும் வேறு ஒரு நபருடன் பழக்கம் இருப்பதாக அறிந்தேன். அதுபற்றி கேட்டபோது, தகராறு வலுத்தது. நான் கேட்ட கேள்விகளுக்கு மோனிகா  எந்தவித பதிலும் சொல்லாததால் ஆத்திரத்தில், கட்டையால் அவளது தலையில் தாக்கினேன்.

அவர் மயங்கி கீழே சாய்ந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். உடனே, ஒரு புடவையை கழுத்தில் கட்டி, தற்கொலை செய்து கொண்டது போன்று மின்விசிறியில் தொங்க விட முயன்றேன். உடலை தூக்க முடியவில்லை. இதையடுத்து, புடவை அறுத்துவிட்டு தந்தையை அழைத்தேன்.

அவரும் ஓடி வந்தார். அவரிடம், மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மோனிகா தூக்கில் தொங்கியதால் புடவையை அறுத்து உடல் கிழே விழுந்துவிட்டதாகக் கூறி நம்ப வைத்தன்.


ஆனால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டேன்’’  என்றார். இதையடுத்து, போலீசார் யுவராஜை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மோனிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் என்றால், அவரது கழுத்தில் காயம் இருக்கும்.


ஆனால், மோனிகாவின் கழுத்தில் எந்த காயமும் இல்லை. மேலும், தலையின் பின் பகுதியில் ரத்தம் காயம் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் யுவராஜை பிடிக்க கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் ஒப்புக்கொண்டார்.


https://goo.gl/xgaHNE


06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்