மனைவியை துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த வாலிபர் : காட்டிக்கொடுத்த அட்டைப் பெட்டி

மனைவியை துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த வாலிபர் : காட்டிக்கொடுத்த அட்டைப் பெட்டி
டெல்லியில் மற்றொரு பெண்ணுடன் கொண்டிருந்த உறவை தட்டிக்கேட்ட மனைவியை 7 துண்டுகளாக வெட்டி கொன்று அட்டை பெட்டியில் போட்டு அனுப்பிய கணவர் சிக்கினார்.

கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் இருவரும் கைது செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த பொறியாளர் சஜத் அலி அன்சாரி. பொறியியல் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த அன்சாரிக்கு ஒரு தெரியாத நம்பர் ஒன்றில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

மறுமுனையில் பேசிய பெண் குறிப்பிட்ட ஒரு நபர் குறித்த விவரத்தை கேட்டுள்ளார். அது தான் அல்ல என்பதை உணர்ந்த அன்சாரி ‘ராங் நம்பர்’ எனக் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.

அதன் பிறகு அவர் தேடி நபர் குறித்த விவரம் கிடைத்ததால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அன்சாரியுடன் ‘ராங் கால்’ மூலம் தொடர்புக்கு வந்த பெண்ணின் பெயர் ஜூகி. நாளடையவில் தொலைபேசி மூலம் ஏற்பட்ட தொடர்பு காதலாக மலர்ந்தது.


2011-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சில நாட்கள் திருமண வாழ்க்கை சிக்கலின்றி சென்ற நிலையில் அன்சாரி வேலையில்லாமல் அவதிப்பட்டார். இதனால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வாழ்க்கையை நடத்தவே அந்த தம்பதியர் கஷ்டப்பட்டனர். இதையடுத்து வேலைதேடி டெல்லிக்கு அவர்கள் புலம் பெயர்ந்தனர்.

டெல்லியில் சிறு சிறு வேலைகளை செய்த அன்சாரிக்கு அந்த பணிகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. குடும்பத்தின் வறுமை தொடர்ந்ததால் கணவன் -மனைவி இடையே தொடர்ந்து சண்டை நடந்துள்ளது.

இந்த நிலையில் அன்சாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து வந்த அவர், வீட்டுக்கு வருவதையும் தவிர்த்து வந்தார்.

இதனால் அன்சாரிக்கும், ஜூகிக்கும் இடையே கடும் சண்டை நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன், இருவருக்கும் மோதல் முற்றியுள்ள நிலையில் அன்சாரி, ஜூகியை அடித்து கொன்று விட்டார்.

இதன் பிறகு செய்வதறியாமல் தவித்த அவர், தனது நெருங்கிய உறவினர்கள் இருவரை உதவிக்கு அழைத்துள்ளார்.

மூன்று பேரும் சேர்ந்த ஜூகியின் சடலத்தை ஏழு துண்டுகளாக வெட்டி, வீட்டில் இருந்த ஏழு அட்டைப் பெட்டிகளில் அடைத்து வெளியே வீசி ஏறிந்து விட்டனர்.

துர்நாற்றம் வீசி விவரம் வெளியே தெரியவே போலீஸார் அந்த அட்டைப் பெட்டியை கைபற்றி சடலத்தை மீட்டனர்.

கைப்பற்றப்பட்ட ஏழு அட்டைப் பெட்டிகளுமே பார்ப்பதற்கு ஒன்று போல் தோற்றம் அளித்தன. அதன் மேல்புறத்தில் ஒரே மாதிரியான முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த குர்கானில் உள்ள முகவரிக்கு சென்று போலீஸார் விசாரித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அட்டைப் பெட்டிகளில் ஜாமியா நகரைச் சேர்ந்த ஜாவித் அக்தருக்கு பார்சல் வந்ததாகவும், அவரிடம் இதனை டெலிவரி செய்ததாகவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழப்பம் அடைந்த போலீஸார் ஜாவித் அக்தரை பிடித்து விசாரித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தமக்கு பார்சல்கள் வந்ததை ஒப்புக் கொண்ட அக்தர், காலி பெட்டிகளை தனது மற்றொரு வீட்டில் போட்டு வைத்திருந்தாகவும் கூறினார். அந்த வீட்டை அன்சாரி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து அக்தருடன் போலீஸார் அன்சாரி வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீடு பூட்டியிருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் அன்சாரியை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் நடந்த அனைத்தயும் அன்சாரி ஒப்புக் கொண்டார். பின்னர் அவரது உறவினர்களையும் போலீஸார் கைது செய்தனர்.https://goo.gl/FhQ8dH


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை