tamilkurinji logo


 

மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை உயருகிறது ,mediclaim policy increase premium

mediclaim,policy,increase,premium,




மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை உயருகிறது

First Published : Tuesday , 5th June 2012 03:15:45 AM
Last Updated : Tuesday , 5th June 2012 03:15:45 AM


மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை உயருகிறது ,mediclaim policy increase premium

தனிநபர் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை குறைவாக உள்ளது. இதனால், பலரும் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். பிரீமிய தொகை குறைவாக இருப்பதால், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.
 
நோய்கள் தாக்கம் மற்றும் மருத்துவத்துக்கான செலவு அதிகரித்து வருவதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயனாளிகளுக்கு அதிகம் செலவிட வேண்டி இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்த இழப்பீட்டு விகிதாச்சாரம் அதிகரித்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  
 
மேலும், பிரீமியம் தொகை குறைவு என்பதால், வசூலாகும் மொத்த தொகையின் அளவும் குறைகிறது. மருத்துவக் காப்பீட்டு பிரீயம் தொகை வசூலானது 2010-11-ம் ஆண்டைவிட, 2011-12-ம் நிதியாண்டில் 18.6 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.13,354 கோடி வசூலானது.
 
எனவே, தொடர்ந்து ஏற்பட்டு வரும் இழப்பை சரிக்கட்ட, மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை உயர்த்த, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.  
 
இதுபற்றி, மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிறுவனங்களின் ஊழியர்கள், மற்றும் தனிநபர்கள், தாங்கள் செலுத்தும் பிரீமிய தொகையைவிட, அவர்கள் கோரிப்பெறும் மருத்துவச்செலவு தொகை அதிகமாக உள்ளது. இதனால், ஒரு நபருக்கு என்று பார்த்தால் 60 சதவிகிதம் அளவுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை சரிக்கட்ட, பிரீமியம் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை உயருகிறது ,mediclaim policy increase premium மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை உயருகிறது ,mediclaim policy increase premium மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை உயருகிறது ,mediclaim policy increase premium
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில்

மேலும்...

 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in